Tomato Price In India: நாடு முழுவதும் உள்ள முக்கிய பெருநகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு மற்றும் பிற பகுதிகளில் பணவீக்கத்திற்கு ஒரு முக்கிய உதாரணமாக தக்காளியின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் தக்காளி முக்கிய உணவாக இருந்தாலும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பணவீக்கத்தின் சுமை விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களால் உணரப்படுகிறது. இருப்பினும் தக்காளி விலை உயர்வு விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய நிலவரம்
டெல்லியில் தக்காளி விலை கிலோ 120 ரூபாயை தொட்ட நிலையில், சென்னை, மும்பையில் கிலோ ரூ.100க்கு விற்பனையானது. இந்த விலைகள் கடந்த மாதம் தேசிய தலைநகர் கண்டதை விட கடுமையான விலை அதிகரிப்பு ஆகும், அப்போது தேசிய தலைநகர் பகுதியின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.60 ஆக இருந்தது.
நேற்றைய நிலவரப்படி, டெல்லி மற்றும் மும்பையில் தக்காளியின் விலை 100 ரூபாயைத் தாண்டிய நிலையில், சென்னை, பெங்களூருவில் தக்காளியின் கிலோ ஒன்றுக்கு 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. மே மாதத்தில் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது விலை உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட இரட்டிப்பு விலையாகும்.
தக்காளி விலை ஏன் ஏறுகிறது?
டெல்லி, மும்பை, சென்னை பெங்களூருவில் தக்காளி விலை உயர்வுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன, அவை காய்கறி விலையில் பணவீக்கம் பங்களித்தன என்பது முக்கியமான ஒன்றாகும். அதிக வெப்பம் காரணமாக விவசாயிகள் தக்காளியை பயிரிட முடியாமல் விளைச்சல் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் சில பகுதிகளில் வெப்ப அலை மற்றும் அதிக வெப்பம் காரணமாக விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கடினமாக இருந்தது, அத்துடன் தாமதமான பருவமழை மற்றும் பல நகரங்களில் மழையின்மை, பயிர் விளைச்சல் குறைவதற்கு வழிவகுத்தது.
இயல்பு நிலைக்கு வருமா?
பல நகரங்களில் வானிலை சீர்குலைவு காரணமாக தக்காளியின் விலை அதிகமாக இருக்கும் நிலையில், அடுத்த 10-15 நாட்களில் காய்கறிகளின் விலை இயல்பு நிலைக்கு வரும் என்று சில ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த காலப் போக்குகளின்படி, மோசமான வானிலை அல்லது மழையின்மை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் தக்காளி விலையில் ஏற்றம் காணப்படும், இருப்பினும், வானிலையால் விளைச்சலை ஆதரிக்கும் போது வரும் வாரங்களில் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும்.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள்
இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று 10 ரூபாய் குறைந்து 70 ரூபாயாக விற்பனையாகிறது. மேலும், பொதுச்சந்தையில் தக்காளியின் விலை ஏற்றம் காணவதை அடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.
தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றத்தை கட்டுபடுத்த கூட்டுறவுத்துறைகளில் மூலம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளனது. அதுமட்டுமின்றி விலையேற்றத்தை கருத்தில் கொண்டு தக்காளியை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் படிக்க | மணிப்பூர் கலவரத்தில் தடை செய்யப்பட்ட சீன பைக்குகள்... இந்தியாவிற்கு வந்தது எப்படி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ