Electric Vehicles: மின்சார வாகனங்களின் விலை பற்றி நிதின் கட்கரி முக்கிய அறிவிப்பு

இந்தியாவின் முதல் மின்சார டிராக்டரை அடுத்த மாதம் அறிமுகப்படுத்துவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்தார்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 17, 2021, 11:34 PM IST
Electric Vehicles: மின்சார வாகனங்களின் விலை பற்றி நிதின் கட்கரி முக்கிய அறிவிப்பு title=

புதுடெல்லி: இது மின்சார வாகனங்களுக்கான காலம். எனவே, இந்தியாவின் முதல் மின்சார டிராக்டரை அடுத்த மாதம் அறிமுகப்படுத்துவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்தார்.

லித்தியம் அயன் பேட்டரிகள் (Lithium ion batteries) இந்தியாவில் தயாரிக்கப்பட்டால், மின்சார வாகனங்களின் விலை மிகவும் குறைந்துவிடும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமையன்று பேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, அடுத்த மாதம் இந்தியாவின் முதல் மின்சார டிராக்டரை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்தார்.

ஸ்கிராபேஜ் கொள்கை பற்றி பேசிய மத்திய அமைச்சர் கட்கரி, "ஸ்கிராபேஜ் பாலிசி புதிய வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும்" என்றார்.

"பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக வாங்கும் புதிய வாகனங்களுக்கு 5% தள்ளுபடி வழங்குமாறு உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்" என்று கட்கரி மேலும் கூறினார்.

Also Read | 7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது

அதோடு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான என்சிஆரில் உள்ள வாகனங்கள் 10 மற்றும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பயன்படுத்தப்படாது என்று கட்கரி கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 13, 2021) தேசிய ஆட்டோமொபைல் ஸ்கிராபேஜ் கொள்கையை (National Automobile Scrappage Policy) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த முயற்சி பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என்றும், பொருளாதார வளர்ச்சியின் செயல்முறையை மேலும் நிலையானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மாற்றும் என்று பிரதமர் தெரிவித்தார்.

தேசிய ஸ்க்ராபேஜ் கொள்கையின் (National Automobile Scrappage Policy) முக்கிய அம்சத்தை எடுத்துரைத்த பிரதமர் மோடி, வாகனம் தயாரித்து எத்தனை ஆண்டுகள் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்வதற்கு பதிலாக, வாகனத்தை சோதனை செய்து அது ஸ்கிராபிற்கு அனுப்பப்படுமா என்பது தீர்மானிக்கப்படும் என்று கூறினார்.

இது நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு பொருந்தும். ஆனால், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான என்சிஆரில் உள்ள வாகனங்கள் 10 மற்றும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பயன்படுத்தப்படாது என்று நம்பப்படுகிறது. அதையே மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் உறுதி செய்தார்.

அரசின் இந்தத் திட்டங்கள், 10,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் மற்றும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் மத்திய அரசு நம்புகிறது.

Also Read | PM Modi Temple: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் கட்டிய பாஜக தொண்டர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News