India vs Australia Perth Test: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் (Border Gavaskar Trophy) இந்தியா - ஆஸ்திரேலியா இரு அணிகளும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. அந்த வகையில், முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ. 22ஆம் தேதி அன்று பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இரு அணிகளும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆஸ்திரேலிய அணிக்கு (Team Australia) எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்பதால் ஓப்பனராக கேஎல் ராகுல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்திய அணியின் (Team India) 3ஆவது பேட்டரான சுப்மான் கில்லுக்கும் கை பெருவிரலில் காயம் ஏற்பட்டதால் முதல் போட்டியில் அவர் விளையாடும் வாய்ப்பும் குறைவாகும். எனவே, தேவ்தத் படிக்கல் மிடில் ஆர்டரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
3வது வேகப்பந்துவீச்சாளர் யார்?
வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் இந்திய அணி மூன்று பிரதான வேகப்பந்துவீச்சாளர்களுடன், ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி உடனும் களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது எனலாம். அந்த வகையில், பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் நிச்சயம் இடம்பெறுவார்கள். மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு மோதல் வரலாம். சிராஜ் முதல் தேர்வாக பலருக்கும் இருப்பார் என்றாலும் ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் உயரம், ஆஸ்திரேலியாவில் அதுவும் குறிப்பாக பெர்த் ஆடுகளத்தின் உதவியோடு எக்ஸ்ட்ரா பவுன்ஸை அறுவடை செய்ய ஏதுவாக இருக்கும்.
மேலும் படிக்க | அஸ்வின், ஜடேஜாவுக்கு இடமில்லை... இதுதான் பிளேயிங் லெவன் - இக்கட்டில் இந்திய அணி!
சுழற்பந்துவீச்சில் ஜடேஜா மற்றும் அஸ்வினுக்கு வாய்ப்பு குறைவாக காணப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர் ஆட்டோமேட்டிக்காக பிளேயிங் லெவனில் இடம்பெறுவார். ஜடேஜாவின் பேட்டிங்கை நம்பி அவரையும் கூட களமிறக்கலாம். இருப்பினும் கம்பீர் எந்த காம்பினேஷனில் களமிறங்க விரும்புகிறாரோ அதனடிப்படையில் வீரர்கள் தேர்வுக்கு. சர்ஃபராஸ் கான் அல்லது ஜடேஜா ஆகியோரில் ஒருவர் விளையாடுவார்கள்.
ரிஷப் பண்ட் vs துருவ் ஜூரேல்
அதே நேரத்தில், துருவ் ஜூரேல் (Dhuruv Jurel) மற்றும் ரிஷப் பண்ட் (Rishabh Pant) இருவருமே பிளேயிங் லெவனில் விளையாடுவார்கள் என்பதால் இவர்களில் யார் விக்கெட் கீப்பராக செயல்படுவார்கள் என்பது பெரிய கேள்வியாக ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ரிஷப் பண்ட் விக்கெட்டுக்கு பின் நின்று பேட்டர்களை சீண்டவும், பந்துவீச்சாளர்களுக்கு ஏதுவாக பீல்டிங்கை அமைக்கவும் உதவுவார். அவரை போன்ற நட்சத்திர வீரர் பந்துவீச்சாளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதும் டெஸ்ட் போட்டியில் அவசியமாகிறது.
India's slip cordon in the practice sessions!
Padikkal at first slip, Virat second, Rahul third slip, Jaiswal at gully while Dhruv Jurel is taking catches at silly-point! pic.twitter.com/ystbguTXMv
— IPLCricket: Everything about Cricket (@IPLnCricket) November 19, 2024
மறுபக்கம் துருவ் ஜூரேல், ரிஷப் பண்ட்டை விட அசத்தலான விக்கெட் கீப்பிங் திறன்களை பெற்றிருக்கிறார். பாய்ந்து பாய்ந்து கேட்ச்களை பிடிப்பது தொடங்கி, விரைவான ஸ்டம்பிங்ஸ் என பலவற்றை சொல்லலாம். இந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் நடந்த இங்கிலாந்து டெஸ்டில் துருவ் ஜூரேல் பென் டக்கெட்டை ரன்-அவுட்டாக்கிய நிகழ்வை குறிப்பிடலாம். ஆஸ்திரேலியாவில் விக்கெட் கீப்பிங் திறனில் மேம்பட்டவர்களே அணிக்கு ரன்களை சேமித்தும் கொடுப்பார்கள்.
விக்கெட் கீப்பர் தான் ரிஷப் பண்ட்...
இப்படி இரண்டு பேரும் சமநிலையில் இருக்க ஒரே ஒரு விஷயம் மட்டுமே ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக நீடிப்பார் என சொல்ல வைக்கிறது. அதுதான் ரிஷப் பண்டின் அனுபவம். ரிஷப் பண்ட்டுக்கு இது மூன்றாவது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் ஆகும். எனவே அவர்தான் விக்கெட் கீப்பிங்கில் நிற்பார் எனலாம். அதைதான் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் உறுதிப்படுத்துக்கின்றன.
ஸ்லிப் பீல்டிங்கில் இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதில் படிக்கல் முதல் ஸ்லிப்பிலும், விராட் கோலி இரண்டாவது ஸ்லிப்பிலும், ஜெய்ஸ்வால் கல்லியிலும், துருவ் ஜூரேல் சில்லி பாயிண்டிலும் பீல்டிங் மேற்கொள்வதை பார்க்க முடிந்தது. இதனால், துருவ் ஜூரேல் அவரது அற்புதமான பீல்டிங் ஸ்கில்ஸை பயன்படுத்தி, இந்தியாவுக்கு ரன்களை சேமித்துக்கொடுப்பார் என நம்பலாம்.
மேலும் படிக்க | IND vs AUS: பார்டர் கவாஸ்கர் தொடரில் சேதேஷ்வர் புஜாரா! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ