ராமரை தரிசிக்க வேண்டுமா? வட இந்தியர்களிடம் ராஜ் தாக்கரே மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக எம்பி

எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரே அயோத்திக்கு வருவதற்கு முன்பு வட இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வழுக்கும் எதிர்ப்பு.

Written by - Shiva Murugesan | Last Updated : May 12, 2022, 12:32 PM IST
  • வட இந்தியர்களிடம் ராஜ் தாக்கரே மன்னிப்பு கேட்க வேண்டும்.
  • உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜ் தாக்கரேவை சந்திக்கக் கூடாது.
  • ராஜ் தாக்கரே இந்துத் தலைவர் அல்ல, குறிப்பாக வட இந்தியர்களுக்கு அவர் வில்லன்.
ராமரை தரிசிக்க வேண்டுமா? வட இந்தியர்களிடம் ராஜ் தாக்கரே மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக எம்பி title=

புது டெல்லி: மகாராட்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே ஜூன் 5ஆம் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை பார்வையிட செல்ல இருக்கிறார். ஆனால் அதற்கு முன்பே இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதாவது மகாராஷ்டிராவில் வாழும் வட இந்தியர்களை குறிவைத்து மகாராட்டிரா நவநிர்மாண் சேனா கட்சி உருவானது என்பது வரலாறு சொல்கிறது. தற்போது இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. 

வட இந்தியர்களிடம் ராஜ் தாக்கரே மன்னிப்பு கேட்க வேண்டும்:
மகாராட்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே அயோத்திக்கு வர வேண்டும் என்றால் வட இந்தியர்களிடம் ராஜ் தாக்கரே மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்காத வரை, அயோத்திக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் திட்டவட்டமாக கூறினார். இதனையடுத்து தற்போது மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். வட இந்தியர்களிடம் ராஜ் தாக்கரே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இவரும் கோரிக்கை வைத்துள்ளார். 

பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்குப் பிறகு, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே கடந்தகால தாக்குதல்களுக்காக வட இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரும்புவதாக் கூறியுள்ளார். 

மேலும் படிக்க: பிரதமர் மோடி மீது மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளனர்: அமித் ஷா புகழாரம்

உத்தரபிரதேச முதல்வர் ராஜ் தாக்கரேவை சந்திக்கக்கூடாது:
முன்னதாக, பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங், எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரே அயோத்திக்கு வருவதற்கு முன்பு வட இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதேநேரத்தில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் ராஜ் தாக்கரேவை சந்திக்கக் கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்து.

ராஜ் தாக்கரே இந்து தலைவர் அல்ல, அவர் நாட்டின் வில்லன்:
ராஜ் தாக்கரே இந்துத் தலைவர் அல்ல, குறிப்பாக வட இந்தியர்களுக்கு அவர் வில்லன் என்றும், 'இந்தி'யர்களுக்கு எதிராக மராத்தியர்களுக்கு வித்திட வேண்டும் என்றும், 2008ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான அவரது செயல்பாடுகள் இருக்கிறது என்று பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் கூறினார். அவர் வட இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவரை இந்த பகுதிக்குள் நுழைய விடமாட்டேன்.

மேலும் படிக்க: இனவாத பதட்டத்தை மோடி அரசு தவிர்க்க வேண்டும் - எச்சரிக்கும் மெகபூபா முப்தி

ராஜ் தாக்கரேவுக்கு கடவுள் ராமர் அறிவைக்கொடுக்க வேண்டும்:
ராஜ் தாக்கரேவின் வருகை குறித்து பாஜக எம்பி லல்லு சிங் கூறுகையில், ராமரின் ஆசிர்வாதம் பெற யார் வந்தாலும் வரவேற்கிறோம். மேலும் பல கட்சிகள் மற்றும் தலைவர்கள் ராமர் மற்றும் அயோத்திக்கு எதிராக அவ்வப்போது பேசி வந்தாலும் அவர்களை அயோத்தியில் நுழைய விடாமல் தடுக்கவில்லை. ராமனை தரிசிப்பவர் பாவங்களில் இருந்து விடுபடுவார். அவர் ராமரை தரிசனம் செய்ய வருகிறார். புதிய இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் அவர்கள் பங்களிக்கும் வகையில் ராமர் அவர்களுக்கு அறிவைக் கொடுக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். பொது வாழ்வில் பொதுமக்களை வழிநடத்துபவர்கள் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

ராஜ் தாக்கரேவின் பயணத்தை பாஜக எம்பிக்கள் எதிர்க்கக் கூடாது:
நேற்று (புதன்கிழமை) மகாராட்டிரா பாஜகவின் முக்கியத் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், எம்என்எஸ் தலைவர் அயோத்திக்கு வருவதை தங்கள் கட்சியின் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்றார். எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரேவின் அயோத்தி பயணத்தை பாஜக எம்பிக்கள் எதிர்க்கக் கூடாது. யார் வேண்டுமானாலும் ராமரை தரிசித்து ஆசி பெறலாம்" என்று ஃபட்னாவிஸ் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து இதுவரை மகாராட்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே இன்னும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 'கிரிக்கெட் பரம்பரை'யிலிருந்து இன்னொரு எம்.பி?! - பாஜக மாஸ்டர் ப்ளான்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News