உ.பி., தேர்தல்: 69 தொகுதிகளில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு!!

Last Updated : Feb 19, 2017, 11:44 AM IST
உ.பி., தேர்தல்: 69 தொகுதிகளில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு!!  title=

உ.பி.யில் 3-வது கட்டமாக 69 தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது.

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. கடந்த 11-ம் தேதி முதற்கட்டமாக 73 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 15-ம் தேதி 2-ம் கட்டமாக 67 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

3-வது கட்டமாக 69 தொகுதிகளில் ஓட்டுப் பதிவு இன்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கியது. வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பெரும்பாலான தொகுதிகள் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டு மத்திய படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இன்றைய தேர்தலில் மொத்தம் 2.41 கோடி பேர் வாக்களிக்கிறார்கள். 826 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 12 மாவட்டங்களில் 69 தொகுதிகளிலும் 16,671 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் லக்னோவில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்குப்பதிவு செய்தார். முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சாய்பாய் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். அதேபோல மாயாவதி அவர்களும் தனது ஓட்டை செலுத்தினார். மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 

 

 

 

 

 

 

 

 

Trending News