மதுரா: மருத்துவ அலட்சியம் தொடர்பான ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. உத்திர பிரதேசத்தின் மதுராவில் உள்ள ஒரு மருத்துவர், முதலமைச்சர் அலுவலகம் (CMO) நிர்ணயித்த Corona Sampling இலக்கை நிறைவு செய்வதற்காக COVID-19 சோதனைக்கு 15 க்கும் மேற்பட்ட தனது சொந்த மாதிரிகளை வழங்குவது படமாக்கப்பட்டுள்ளது.
பால்டியோ சமூக சுகாதார மையத்தில் இந்த சம்பவம் நடந்தது. டாக்டர் ராஜ்குமார் சரஸ்வத்தின் மாதிரிகள் ஒரு சுகாதார ஊழியரால் எடுக்கப்பட்டதை வீடியோவில் காண முடிகிறது. அதற்குப் பிறகு இந்த மாதிரிகள் CMO-வுக்கு போலி பெயர்களுடன் சோதனைகளுக்கு அனுப்பப்பட்டன.
வைரலாகிவிட்ட அந்த வீடியோவில், தினசரி சோதனை இலக்கை அடைய மருத்துவர் தனது மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து சுமார் 15 Swab மாதிரிகளை (Swab Samples) ஒரு சுகாதார பணியாளருக்கு அளிப்பதைக் காண முடிகிறது.
ALSO READ: இனி கொரோனாவை மூலிகையால் விரட்டலாம்.. மூலிகை மருந்து பரிசோதனைக்கு WHO அனுமதி..!!!
அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கிய அந்த வீடியோவை இங்கே காணலாம்:
#fake #sampling of #corona #test: A video of #Mathura’s CHC doctor giving more than 15 samples for Corona test for completing his sampling target goes viral. Health officials mark inquiry into the matter. @timesofindia @UPGovt @dmmathura7512 @myogiadityanath pic.twitter.com/b044iinffd
— Anuja Jaiswal (@anujajTOI) September 20, 2020
சுகாதார ஊழியர்களில் ஒருவர், வீடியோவில், மருத்துவர் தன் மாதிரிகளைக் கொண்டே இத்தனை சோதனைகளை செய்யக்கூடாது என்றும், இதனால் அவர் சிக்கலில் மாட்டிக்கொள்ளக்கூடும் என்றும் கூறுவதையும் கேட்க முடிகிறது.
குறிப்பாக, மதுராவின் மாவட்ட சுகாதார அதிகாரிகள் ஒரு நாளைக்கு 1,500 மாதிரி சோதனைகளை இலக்காகக் கொண்டுள்ளனர்.
அதே சமூக மையத்தைச் சேர்ந்த மற்றொரு மருத்துவர் அமித், இந்த சம்பவம் தொடர்பாக CMO-விடம் புகார் அளித்தார். சி.எச்.சி பொறுப்பாளரான டாக்டர் யோகேந்திர சிங் ராணா, சோதனைக்கு அதிக அளவில் மையத்திற்கு மக்கள் வரவில்லை என்றால், போலி மாதிரிகளை எடுக்க இந்த மையத்தின் ஒப்பந்த ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
கொரோனா பாசிட்டிவ் நோயாளிகள் அவரது போலி கையொப்பங்களுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார். இலக்கு எண்ணிக்கையிலான சோதனைகளை நடத்துமாறு சி.எச்.சி பொறுப்பாளர் பணியாளர்களை அச்சுறுத்தியதாகவும், இல்லையெனில் அவர்களின் ஒப்பந்தம் நிறுத்தப்படும் என்று எச்சரித்ததாகவும் அவர் கூறினார்.
வீடியோ வைரலாகிய பின்னர், இந்த விவகாரம் குறித்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர்.
ALSO READ: அதிகரிக்கும் COVID-19 பாதிப்பு... இந்த நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR