அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு இரு அரசாங்கத்திற்கு இடையேயான உறவு மட்டும் இல்லை, மக்களை மையமாகக் கொண்டவை என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணத்திற்குப் பிறகு இன்று இரவு இந்தியாவை விட்டு வெளியேறும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஒரு கூட்டு செய்திக்குறிப்பில் பங்கேற்ற பிரதமர் மோடி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் (ராஷ்டிரபதி பவனில்) சடங்கு வரவேற்பைப் பெற்றார். டெல்லியில் ஒரு நிரம்பிய நாளில் பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அகமதாபாத் மற்றும் ஆக்ராவிற்கு சென்ற அமெரிக்க அதிபர் தற்போது டெல்லி திரும்பியுள்ள நிலையில் இன்று மாலை அவர் 5 மணியளவில் ஊடகங்களுடன் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
LIVE: Ceremonial welcome of President @realDonaldTrump at Rashtrapati Bhavan https://t.co/7W4MyV7XAT
— President of India (@rashtrapatibhvn) February 25, 2020
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் பயணம் குறித்து அறிந்துக்கொள்ள வேண்டிய 10 தகவல்கள்...
- "பிரதமர் மோடியும் நானும் ஒரு சுதந்திரமான மற்றும் சீரான இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்காகவும் ஒரு விரிவான வர்த்தக ஒப்பந்தத்துக்காகவும் இணைந்து செயல்படுகிறோம். நாங்கள் பாதுகாப்பு பற்றியும் விரிவாக விவாதித்தோம், மேலும் ஒரு விரிவான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டோம். இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் ரோமியோ ஹெலிகாப்டர்கள் 24 MH-60 கொள்முதலும் அடங்கும். ஆறு AH-64E அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான மற்றொரு ஒப்பந்தம் இதில் அடங்கும்" என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.
- "கடந்த இரண்டு நாட்கள், குறிப்பாக நேற்று மைதானத்தில், இது எனக்கு ஒரு பெரிய மரியாதை. என்னை விட மக்கள் ஆதரவு உங்களுக்காக (பிரதமர் நரேந்திர மோடி) அதிகமாக இருந்திருக்கலாம் ... நான் உங்களைக் குறிப்பிடும் ஒவ்வொரு முறையும் அவர்கள் அதிகமாக உற்சாகப்படுத்தினர். மக்கள் விரும்புகிறார்கள் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்,” என்று ஜனாதிபதி டிரம்ப் கூறினார். ஜனாதிபதி டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் தங்கள் 36 மணி நேர பயணத்தை ஜனாதிபதி விருந்துடன் முடித்துவிட்டு இன்று இரவு அமெரிக்காவிற்கு பறக்கவுள்ளனர்.
- அதிபர் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் சடங்கு வரவேற்பில் ராஷ்டிரபதி பவனின் முன்னணியில் வரவேற்றனர். அங்கிருந்து அவர்கள் மகாத்மா காந்தியின் நினைவு ராஜ்காட்டுக்குச் சென்றனர், அங்கு அமெரிக்க ஜனாதிபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- அதிபர் டிரம்ப் பின்னர் டெல்லியின் மையப்பகுதியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியுடன் குழு அளவிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார். அமெரிக்காவும் இந்தியாவும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும், பின்னர் இரு தலைவர்களும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிடுவார்கள்.
- இந்திய இராணுவம் மற்றும் கடற்படைக்கு சாப்பர்கள் வழங்குவதற்காக 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. திங்களன்று அகமதாபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற “நமஸ்தே, டிரம்ப்” நிகழ்ச்சியில் உரையாற்றும் போது ஜனாதிபதி டிரம்ப் இந்த ஒப்பந்தங்களை குறித்து பேசியிருந்தார்.
- "நாளை எங்கள் பிரதிநிதிகள் 3 பில்லியன் டாலருக்கும் அதிகமான விற்பனையை கையெழுத்திடுவார்கள் என்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மிகச்சிறந்த அதிநவீன இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற உபகரணங்களை இந்திய ஆயுதப்படைகளுக்கு விற்கிறேன்" என்றும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்தார். உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களிலும் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.
- அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் டெல்லி அரசுப் பள்ளிக்கு சென்று தியானம், நாடகங்கள், குழந்தைகளிடையே பதட்டம் மற்றும் மன அழுத்த அளவைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்ட அடிப்படை கீழ்ப்படிதல் ஆகியவற்றை உள்ளடக்கிய "மகிழ்ச்சி வகுப்பை" பார்வையிட்டார்.
- மாலையில், தனது பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் மாநில விருந்துக்காக ராஷ்டிரபதி பவனுக்கு செல்வார். அங்கு அவருக்கான உணவு பட்டியலில் ஆட்டுகறி பிரியாணி, ரான் ஆலிஷான், தால் ரைசினா, சால்மன் மீன் டிக்கா மற்றும் எலுமிச்சை கொத்தமல்லி சூப் ஆகியவை இடம்பிடித்துள்ளன.
- திங்களன்று, அதிபர் டிரம்ப் இந்தியா வந்த சிறிது நேரத்திலேயே அகமதாபாத்தில் மக்கள் கூட்டத்தால் நிரம்பிய மொட்டெரா கிரிக்கெட் மைதானத்தில் உரையாற்றினார். பிரதமர் மோடியை அவர் ஒரு "சிறந்த நண்பர்" என்று புகழ்ந்தார்.
- இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி டிரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவான்கா டிரம்ப் மற்றும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு விஜயம் செய்தனர். பின்னர், ட்ரம்ப் குடும்பத்தினர் ஆக்ராவுக்குச் சென்று கண்கவர் தாஜ்மஹாலில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் செலவிட்டனர்.