பான் கார்டுக்கு குட் பாய்; எல்லாவற்றிக்கும் ஆதார் பயன்படுத்தலாம்..

பான் எண் இல்லாமல் ஆதார் எண் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம்!!

Last Updated : Jul 8, 2019, 10:40 AM IST
பான் கார்டுக்கு குட் பாய்; எல்லாவற்றிக்கும் ஆதார் பயன்படுத்தலாம்..

பான் எண் இல்லாமல் ஆதார் எண் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம்!!

கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கையாக ரூ.50,000-த்துக்கும் மேலான பணபரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயம் என்ற விதி அமலில் இருந்து வருகிறது. இந்தநிலையில், பான் கார்டுகளுக்குப் பதிலாக ஆதார் அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தற்போது அறிவித்திருக்கிறது.

பான் எண் இல்லாதவர்கள் ஆதார் எண்ணை குறிப்பிட்டு வருமான வரி தாக்கல் செய்யலாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார். வருமான வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்ட பான் கார்டின் தேவை குறைந்துவிட்டதா என கேள்விகள் எழுந்த நிலையில், இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் பிரமோத் சந்திர மோடி விளக்கமளித்துள்ளார்.

அதில், பான் எண் கண்டிப்பாக உயிர்ப்புடன் இருக்கும் எனவும் பான் கார்டுகள் இல்லாதவர்களும் வரி செலுத்துவதற்கு ஏதுவாக ஆதார் கார்டு மூலம் வரி செலுத்தும் முறை நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாகவும், அதேபோல் ஆதார் கார்டு மூலம் வரி தாக்கல் செய்வோருக்கு, வருமான வரித்துறை அதிகாரிகள் தாமாக முன்வந்து பான் கார்டு எண் ஒதுக்குவார்கள் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

 

More Stories

Trending News