ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ்வேயில் லாரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் ஏழு பேர் பரிதாபமாக பலி!!
உத்தரப்பிரதேசத்தில் மெயின்புரிக்கு அருகே ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ்வேயில் லாரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதிய சாலை விபத்தில் குறைந்தது ஏழு பேர் பலி மற்றும் 34 பேர் காயமடைந்தனர்.
ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ்வேயில் லாரி மற்றும் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை பற்றி தகவல் அறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புபணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விபத்தில் காயமடைந்தவர்களை, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், விபத்தில் மக்களின் உயிரிழப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பஸ்சில் சிக்கியிருந்த உடல்கள் பஸ் பகுதியை வெட்டி மீட்டெடுக்கப்பட்டன.
7 dead and 34 injured after a bus rammed into a truck on Agra-Lucknow Expressway near Mainpuri pic.twitter.com/sBjWuaSzu1
— ANI UP (@ANINewsUP) April 21, 2019
விபத்து நடந்தபோது டெல்லிலிருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள பெனாரிலிருந்து பஸ் வரை சென்றுள்ளது. இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்த விவரங்கள் காத்திருக்கின்றன.