)
Benefits of Asafoetida: நமது சமையலறைகளில் கண்டிப்பாக காணப்படும் பொருட்களில் பெருங்காயமும் ஒன்று. இது உணவிற்கு அலாதியான சுவையையும் மணத்தையும் அளிக்கின்றது. இது உணவின் சுவையை அதிகரிப்பதோடு இதில் பல வித ஆரோக்கிய நன்மைககும் உள்ளன. பெருங்காயத்தின் பயன்பாட்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பெருங்காயம் இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது
பெருங்காயம் (அசாஃபோடிடா) ஆரோக்கியத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது. இதில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை சில குறிப்பிட்ட வழிகளில் பயன்படுத்தினால், பல நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம். பெருங்காயத்தின் மூலம் எந்தெந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என இங்கே காணலாம்.
அஜீரணம் (Indigestion)
வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படும் நபர்களுக்கு பெருங்காயம் ஒரு அருமருந்தாக பயன் தரும். அஜீரணம் ஏற்பட்டால், முதலில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் பெருங்காயத்தை கலந்து குடிக்கவும். இது தவிர, பெருங்காயத்தை ஒரு பேஸ்டாக தயார் செய்து தொப்புளைச் சுற்றி வட்டமாகத் தேய்க்கலாம். இவற்றின் மூலம் விரைவில் செரிமானம் மேம்படும்.
எடை இழப்பு (Weight Loss)
பெருங்காயம் எடையை குறைக்கவும் உதவும். பெருங்காய நீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது உடலில் கலோரி எரியும் விகிதத்தை அதிகரிக்கிப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர, பசியை குறைக்கவும் இந்த தண்ணீர் உதவுகிறது. இதனால் நாம் அடிக்கடி ஆரோக்கியமற்ற, தேவையற்ற உணவுப் பொருட்களை சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது.
தலைவலி (Headache)
பல நேரங்களில் பதற்றம், பசி, வாயுத்தொல்லை, உஷ்ணம் என பல காரணங்களால் தலைவலியால் அவதிப்படுகிறோம். அதை சரி செய்ய நாம் வலி நிவாரணிகளை உட்கொள்கிறோம். ஆனால் இது ஒரு ஆபத்தான முறையாகும். இதனால் பல ஆபத்தான பக்க விளைவுகள் ஏற்படலாம். தலைவலிக்கு இயற்கையான வழியில் நிவாரணம் காண, பெருங்காகயத்தை அரைத்து பேஸ்ட் செய்து சிறிது நேரம் கழித்து நெற்றியில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
உப்பசம் (Bloating)
பலருக்கு வயிறு உப்பச பிரச்சனை ஏற்படுகின்றது. இதனால் இன்னும் பல வித உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. இந்த பிரச்சனை இருந்தால், விளக்கெண்ணையை பெருங்காய பொடியுடன் தொப்புளைச் சுற்றி தேய்க்கவும். இவ்வாறு செய்வதால் வாயுத்தொல்லை, வயிற்று உப்பசம் ஆகியவற்றிலிருந்து விரைவான நிவாரணம் கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி (Immunity)
பெருங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. இது தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ