இறந்த குழந்தையின் உடலை 4 நாட்களாக இயேசுவின் முன் வைத்திருந்த தாய்!

உயிர்த்தெழுவார் என இயேசுவின் உருவப்படம் முன் இறந்த குழந்தையின் உடலை 4 நாட்களாக 

Updated: Nov 18, 2019, 06:03 PM IST
இறந்த குழந்தையின் உடலை 4 நாட்களாக இயேசுவின் முன் வைத்திருந்த தாய்!

உயிர்த்தெழுவார் என இயேசுவின் உருவப்படம் முன் இறந்த குழந்தையின் உடலை 4 நாட்களாக 
வைத்திருந்த தாய்!

கடவுள் மீதான குருட்டு நம்பிக்கையில் பெற்றோர் தங்கள் நான்கு வயது மகளின் இறந்த உடலை மீண்டும் கடவுள் உயிர்ப்பிப்பார் என்று வீட்டில் வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரவிந்த் வான்வாசியின் நான்கு வயது மகள் நவம்பர் 14 ஆம் தேதி நோய்வாய்ப்பட்டு 15 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், "ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கிறித்துவத்தை ஏற்றுக்கொண்ட வான்வாசி, அவரது குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களான ஒருவர்  இயேசு கிறிஸ்து மற்றும் பைபிளின் படத்திற்கு முன்னால் தனது இறந்த மகனின் உடலை வைத்து, குழந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க பிரார்த்தனை செய்யும்படி கூறியுள்ளார். இதையடுத்து, தனது குழந்தை உயிருடன் வேண்டும் என்ற நம்பிக்கையில், வான்வாசியும் அவரது குடும்பத்தினரும் உறவினர் கூறியுள்ளதை செய்துள்ளதாக இன்ஸ்பெக்டர் வினோத் குமார் திவாரி கூறினார்.

இதையடுத்து, சில கிராமவாசிகள் மௌவ் காவல்துறை கண்காணிப்பாளர் அனுராக் ஆர்யாவுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அவர் இன்ஸ்பெக்டரை வான்வாசியின் இல்லத்திற்கு அனுப்பினார். இதையடுத்து, காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினரை சமாதானப்படுத்தி குழந்தையின் உடலை அடக்கம் செய்ய சம்மதிக்க வைத்துள்ளனர். 

கூலி தொழிலாளியாக செங்கல் சூளையில் பணிபுரியும் வான்வாசி, ஒவ்வொரு கிறிஸ்துமஸிலும் கிராமத்திற்கு வருகை தந்த  ஜான்பூரைச் சேர்ந்த ஒரு போதகரைத் தொடர்பு கொண்ட பின்னர், அவரும் அருகிலுள்ள சில குடும்பங்களும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக போலீசாரிடம் தெரிவித்தார்.