காசி ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு தேவை! மனுவை விசாரிக்கும் நீதிமன்றம்

Gyanvapi Mosque Issue In Court: ஞானவாபி மசூதி வளாகம் முழுவதையும் இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்யக் கோரிய மனுவை வாரணாசி நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 17, 2023, 06:03 AM IST
  • ஞானவாபி மசூதி வளாக சர்வே விவகாரம்
  • ஞானவாபி மசூதியை இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்யுமா?
  • இந்துக்கள் தரப்பும், எதிர்க்கும் இஸ்லாமியர் தரப்பும்
காசி ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு தேவை! மனுவை விசாரிக்கும் நீதிமன்றம் title=

வாரணாசி: வெள்ளிக்கிழமை, அலகாபாத் உயர் நீதிமன்றம், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஞானவாபி மசூதியில் உள்ள சிவலிங்கம் இருப்பதாக கூறப்படும் கட்டிடத்தின் வயதைக் கண்டறிய உத்தரவிட்டது. காசி ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு தேவை என்று கோரும் மனுவை  வாரணாசி நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அடுத்துள்ள ஞானவாபி மசூதி வளாகத்தை இந்திய தொல்லியல் துறை (Archaeological Survey of India) ஆய்வு செய்ய கோரிய மனுவை விசாரிக்க நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (2023, மே 16) ஒப்புக்கொண்டது. இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தாக்கல் செய்த மனுவை ஏற்ற மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ், இந்த மனுவுக்கு மே 19-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு ஞானவாபி மசூதி குழுவிடம் கேட்டுக் கொண்டதாக மாவட்ட அரசு வழக்கறிஞர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 22ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

வெள்ளிக்கிழமை, அலகாபாத் உயர் நீதிமன்றம், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாரணாசி ஞானவாபி மசூதியில் உள்ள சிவலிங்கம் என்று கூறப்படும் கட்டிடத்தின் வயதைக் கண்டறிய உத்தரவிட்டது.

மேலும் படிக்க | M. K. Stalin: முதல்வர் விழுப்புரம் பயணம்-கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல்!

கியான்வாபி மசூதியில் நீதிமன்றம் மேற்கொண்ட கட்டாய ஆய்வின் போது மே 2022 இல் கண்டுபிடிக்கப்பட்ட கட்டமைப்பின் கார்பன் டேட்டிங் உட்பட அறிவியல் ஆய்வுக்கான மனுவை நிராகரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் அக்டோபர் 14 உத்தரவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

'சிவலிங்கம்' பற்றிய அறிவியல் ஆய்வு நடத்த இந்து வழிபாட்டாளர்கள் செய்த விண்ணப்பத்தை சட்டப்படி தொடருமாறு வாரணாசி மாவட்ட நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. 1669 ஆம் ஆண்டில் கோயில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு அவுரங்கசீப்பின் உத்தரவின் பேரில் அங்கு ஒரு மசூதி கட்டப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்து உள்ளது.

மேலும் படிக்க | விழுப்புரம் விஷ சாராயம் விவகாரம்: பலி எண்ணிக்கை உயர்வு... போலீசாரின் அடுத்த ஆக்‌ஷன் என்ன?

இந்த அம்மன் சிலைக்குத் தினமும் பூஜை நடத்த அனுமதிக்கக் கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம், ஐந்து இந்து பெண்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணையில், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தவும், வீடியோ பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. பலத்த பாதுகாப்பிற்கு இடையில், வீடியோ பதிவு செய்யப்பட்டது.

மசூதி வளாகத்தில் உள்ள ஒரு குளத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து, வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அடுத்துள்ள ஞானவாபி மசூதி வளாகத்தை இந்திய தொல்லியல் துறை (Archaeological Survey of India) முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க | அழகு கொஞ்சும் பசுமை பள்ளத்தாக்கு! காஷ்மீரில் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்த திட்டம்

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News