மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருகிறது. சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது. அம்மாநிலத்தின் கல்யாண் நகரில் மழையின் காரணமாக சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது. அந்த சாலை வழியாக பைக்கில் ஆணும், பெண்ணும் வந்தனர். அப்பொழுது சாலையில் இருந்த குழியினால் கீழே விழுந்து விட்டார்கள். பின்னால் இருந்து வந்த பஸ் அவர்கள் மீது ஏறியது. அதிஷ்டவசமாக ஆண் தப்பித்துக்கொள்ள, அந்த பெண்ணை நசுக்கியது பஸ்.
இந்த சம்பவம், அங்கு ஒரு கடைக்கு வெளியே பொருத்தப்பட்டிறிந்த சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதே இடத்தில், கடந்த வாரம் குழிகள் காரணமாக இரண்டு பேர் இறந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இறந்த அந்த பெண்ணின் பெயர் மனிஷா போயர் (40), இவர் ஒரு சிவில் பாடசாலை ஊழியர் ஆவார். கல்யாண் நகரில் மழை பெய்துக் கொண்டு இருக்கையில், மனிஷா தனது உறவினருடன் கையில் குடை பிடித்தபடி அமர்ந்து பைக்கில் செல்கிறாள். அவர்கள் சென்ற சாலையில் தண்ணீர் தாங்கி இருந்ததால், சாலையில் இருந்த குழி வெளியே தெரியவில்லை. இதனால் பைக் குழியில் சிக்கியதால், இருவரும் கீழே விழுந்தனர். அப்பொழுது பின்னால் இருந்து வேகமாக வந்த பஸ் பெண்ணின் தலையை நசுக்கிய படி முன்னோக்கி சென்றது. இந்த விபத்தில் பெண்ணின் உறவினர் அதிஷ்டவசமாக தப்பினார்.
அந்த சாலையில் இருந்தவர்கள் அந்த பெண்ணை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தார். இதுக்குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ: