வினோத வழக்கு! 45 ஆண்டுகளாக பூண்டு - வெங்காயத்தை சுவைக்காத கிராம மக்கள்!

பூண்டு மற்றும் வெங்காயத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உணவின் சுவை அபாரமாகிறது. ஆனால் 45 ஆண்டுகளாக பூண்டு - வெங்காயத்தை சுவைக்காத கிராமம் ஒன்று உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 26, 2023, 06:51 PM IST
  • வெங்காயம் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தாமல் சந்தையில் இருந்து கொண்டு வருவதையும் நிறுத்திவிட்டனர்.
  • பூண்டு, வெங்காயம் மட்டுமின்றி இறைச்சி, மது போன்ற பொருட்களுக்கும் தடை.
  • இங்கு யாரும் மது அருந்துவதை பார்க்க முடியாது.
வினோத வழக்கு! 45 ஆண்டுகளாக பூண்டு - வெங்காயத்தை  சுவைக்காத கிராம மக்கள்! title=

வெங்காயம் மற்றும் பூண்டு உணவில் பயன்பாடுத்தாத வீடுகளை காண்பது மிக மிக அரிது. வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றின் விலை அதிகரித்தாலும், குறைந்தாலும், அவை செய்தித் தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகின்றன. அவை பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெங்காயம் - பூண்டு உபயோகிப்பதால் உணவின் சுவை அதிகரிக்கிறது. அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இவை பருவகால நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. இவ்வளவு நன்மைகள் இருந்தும் இவற்றை தொடாமல் இருக்கும் ஒரு கிராம மக்கள் உள்ளனர் என்றால் ஆச்சர்யமாக உள்ளது அல்லவா...

கடந்த 40 முதல் 45 ஆண்டுகளாக பூண்டு மற்றும் வெங்காயம் பயன்படுத்தப்படாத ஒரு கிராமத்தை பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பூண்டு - வெங்காயம் சாப்பிடுவதை மக்கள் தவிர்க்கின்றனர். இதை வாங்குவதற்கு கூட பயம்.

பூண்டு வெங்காயத்தை ஒதுக்கும் கிராமம்

இங்கு குறிப்பிடப்படும் கிராமம் பீகாரில் உள்ள ஜெகனாபாத் அருகே உள்ளது. சிரி பஞ்சாயத்தின் கீழ் வரும் திரிலோகி பிகா கிராமம் என்று அழைக்கப்படும் இந்த கிராமம், ஜெகனாபாத் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 30 முதல் 35 வீடுகள் உள்ளன. இங்குள்ள அனைத்து வீடுகளிலும் வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் அனைவரும் வெங்காயம், பூண்டு இல்லாத உணவை உண்கின்றனர்.

மேலும் படிக்க | அதிர்ச்சி சம்பவம்! தன்னை கொல்ல வந்த கசாப்பு கடைக்காரரை போட்டுத் தள்ளிய பன்றி!

உண்மையான காரணம் 

திரிலோகி பிக்கா கிராமத்தின் பெரியவர்கள் கூறுகையில், சுமார் 40 முதல் 45 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் மக்கள் வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதை நிறுத்திவிட்டனர்.  இங்குள்ள மக்கள் நீண்ட காலமாக இந்த பாரம்பரியத்தை பின்பற்றுகிறார்கள். கிராமத்தின் பெரியோர்கள் இது குறித்து கூறுகையில், கிராமத்தில் தாகுர்பாடி கோவில் உள்ளது. இது பல ஆண்டுகள் பழமையானது. மேலும் இந்த கோவிலின் காரணமாக, மக்கள் பூண்டு மற்றும் வெங்காயத்தை விட்டு விலகி இருக்கிறார்கள்.

விரும்பத்தகாத சம்பவங்கள்

பலர் இந்த மரபை உடைக்க முயன்றபோது, ​​பல விரும்பத்தகாத சம்பவங்கள் அவர்களின் வீடுகளில் நிகழ்தது என்று அவர் கூறுகிறார். இச்சம்பவங்களுக்குப் பிறகு, இங்குள்ள மக்கள் பூண்டு, வெங்காயம் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தாமல் சந்தையில் இருந்து கொண்டு வருவதையும் நிறுத்திவிட்டனர். இந்த கிராமத்தில் பூண்டு, வெங்காயம் மட்டுமின்றி இறைச்சி, மது போன்ற பொருட்களும் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு யாரும் மது அருந்துவதை பார்க்க முடியாது, இங்குள்ள மக்கள் இறைச்சி சாப்பிடுவதையும் கைவிட்டுள்ளனர்.

மேலும் படிக்க | நிலவில் கால்வைத்த 3ஆவது மனிதர்... 93 வயதில் செய்த காரியத்தை பாருங்க - இளமை ஊஞ்சலாடுது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News