Weekend Curfew: கொரோனா தொற்றை கட்டுப்படுத்த டெல்லி முதல்வர் அதிரடி முடிவு

புதன்கிழமையன்று தில்லியில் ஒரே நாளில் 17,282 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். 104 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்தியாவில் புதன்கிழமை COVID-19 நோய்த்தொற்று காரணமாக 1,033 பேர் இறந்தனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 15, 2021, 02:24 PM IST
  • டெல்லியில் வார இறுதி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.
  • டெல்லியில் அதிகரிக்கும் தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • புதன்கிழமையன்று தில்லியில் ஒரே நாளில் 17,282 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.
Weekend Curfew: கொரோனா தொற்றை கட்டுப்படுத்த டெல்லி முதல்வர் அதிரடி முடிவு title=

புதுடெல்லி: தேசிய தலைநகரில் அதிகரித்து வரும் கோவிட் -19 தொற்றை கருத்தில் கொண்டு, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசாங்கம், தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு வார இறுதி ஊரடங்கு உத்தரவை வியாழக்கிழமை அறிவித்தது.

COVID-19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த, டெல்லியில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 

மருத்துவமனைகளில் உள்ள நிலைமை பற்றி கூறிய டெல்லி முதல்வர் "டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை இல்லை. சமீபத்திய தரவுகளின்படி, 5000 க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன." என்று தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊரடங்கு உத்தரவுக்கான அனுமதி பாஸ்கள் வழங்கப்படும் என்றும் கெஜ்ரிவால் மேலும் தெரிவித்தார்.

"மால்கள், ஜிம்கள், ஸ்பாக்கள் மற்றும் ஆடிடோரியங்கள் மூடப்படும். சினிமா அரங்குகள் 30% திறனில் மட்டுமே இயங்கும். மக்கள் உணவகங்களில் உணவருந்த அனுமதிக்கப்பட மாட்டார்கள், வீட்டு விநியோகங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்" என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

ALSO READ: Coronavirus New Symptoms: மிரளவைக்கும் கொரோனாவின் புதிய அறிகுறைகள்!

டெல்லி முதல்வர், லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜலுடன் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து ஒரு முக்கியமான சந்திப்பை நடத்திய பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

புதன்கிழமையன்று தில்லியில் ஒரே நாளில் 17,282 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். 104 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்தியாவில் புதன்கிழமை COVID-19 நோய்த்தொற்று காரணமாக 1,033 பேர் இறந்தனர். இது 2020 அக்டோபருக்குப் பிறகு மிகப்பெரிய இறப்பு எண்ணிக்கையாகும். டெல்லியின் மிகப்பெரிய தகன மைதானமான நிகம்போத் காட்டில் தகனங்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் முன்னதாக கொரோனா தொற்று (Coronavirus) தேசிய தலைநகரில் மிக வேகமாக அதிகரித்து வருவதாக கூறியிருந்தார். எனினும், இந்த நிலைக்கு லாக்டவுன் ஒரு தீர்வாகாது என்றும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மிகவும் தேவையாக இல்லாத வரையில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும், கூட்டங்களைத் தவிர்க்குமாரும், முகக்கவசங்களை அணிந்து COVID-19-க்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை (ஏப்ரல் 15, 2021) வெளியிட்ட அறிக்கையின் படி, நாட்டில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் மொத்த கொரோனா வைரஸ் எண்ணிக்கை 1.40 கோடியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 93,528 பேர் குணமடைந்துள்ளனர், 1,038 பேர் இறந்தனர். நாட்டில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 14,71,877 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா (Maharashtra), உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில் கோவிட் -19 தொற்றுநோயின் ஒற்றை நாள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த தொற்று எண்ணிக்கையில் 82.04% தொற்று இந்த 10 மாநிலங்களில் மட்டும் பதிவாகியுள்ளது.

ALSO READ: தமிழகத்தில் ஆட்டம்போடும் கொரோனா, சென்னையில் 100 போலீசாருக்கு தொற்று

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News