யோகா பயிற்சியாளர்களுக்கு COVID-19 பாதிப்பதற்கான வாய்ப்பு குறைவு: ஸ்ரீபாத் நாயக்

யோகா பயிற்சி பெறுபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கூறியுள்ளார்..!

Last Updated : Jun 21, 2020, 01:39 PM IST
யோகா பயிற்சியாளர்களுக்கு COVID-19 பாதிப்பதற்கான வாய்ப்பு குறைவு: ஸ்ரீபாத் நாயக் title=

யோகா பயிற்சி பெறுபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கூறியுள்ளார்..!

யோகா பயிற்சியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு PTI-யுடன் பேசிய நாயக், நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் போது இந்தியா மற்றும் உலகம் முழுவதும் யோகாவை பரப்பியது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவியது என அவர் குறிப்பிட்டார்.

"மோடி தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் யோகாவை பரப்பியது COVID-19-யை எதிர்த்துப் போராட ஒரு பெரிய வழியில் உதவியது என்று நான் நம்புகிறேன். யோகா பயிற்சி பெறுபவர்களுக்கு COVID-19 தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு, என அமைச்சர் மேலும் கூறினார்.

வடக்கு கோவா மாவட்டத்தில் பனாஜிக்கு அருகிலுள்ள ரிபந்தர் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் யோகா நிகழ்சி நடத்திய பாஜக தலைவர், யோகா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் சுவாச அமைப்பை பலப்படுத்துகிறது, இது COVID-19 போன்ற நோய்களுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது என்றார். 

ஞாயிற்றுக்கிழமை லேயில் (Leh) நடைபெறவிருந்த சர்வதேச யோகா தின விழா, COVID-19 தொற்றுநோயால் ரத்துசெய்யப்பட்டதாகவும், கொரோனா சமூக தூரத்தை ஒரு தேவையாக மாற்றியதாகவும் நாயக் கூறினார். 

READ | தினம் யோகா பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

மக்கள் தங்களது வீட்டில் தங்கும் போது யோகா பயிற்சி செய்ய அறிவுறுத்தப்பட்டதாக வடக்கு கோவாவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் தெரிவித்தார். மேலும், "எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மக்கள் வீட்டில் யோகா பயிற்சி செய்வதன் மூலம் யோகா தினத்தில் பங்கேற்றனர். பொது இடத்தில் யோகா செய்கிறார்களானால் 20 பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்று நாங்கள் பரிந்துரைத்தோம்," என்றார்.

வடக்கு கோவா மாவட்டத்தில் தனது தொகுதியான சங்காலிமில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ஒரு நபர் தன்னைச் சுற்றியுள்ள விஷயங்களை நேர்மறையான முறையில் உணர யோகா உதவுகிறது என்றார். "யோகாவால் வெளியில் நடப்பதைக் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் அதால் உடலுக்குள் நடப்பதைக் கட்டுப்படுத்த முடியும், ஒரு நபர் தன்னைச் சுற்றியுள்ள விஷயங்களை எவ்வாறு நேர்மறையான முறையில் உணருகிறார் என்பதை மாற்றும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றலாம்" என்று சாவந்த் ட்வீட் செய்துள்ளார்.

யோகா மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அறியப்பட்டதாக மாநில சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே தெரிவித்தார். "ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை வளர்ப்பதற்காக வீட்டில் யோகா பயிற்சி செய்வதே இந்த ஆண்டுகளில் கவனம் செலுத்துகிறது. இந்த #இன்டர்நேஷனல் யோகா தினத்தை முன்னிட்டு யோகாவிற்கு குறைந்தபட்சம் ஒரு மணிநேரமாவது எடுத்துக்கொள்வதாக உறுதிமொழி எடுத்துள்ளதாக" அவர் ட்வீட் செய்துள்ளார்.

Trending News