IPL_2018: அடுத்தடுத்து வீரர்களை இழக்கும் சி.எஸ்.கே அணி!!

கடுமையான முதுகுவலி காரணமாக அடுத்த போட்டியில் தோனி களமிறங்குவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகியுள்ளது! 

Last Updated : Apr 16, 2018, 08:14 PM IST
IPL_2018: அடுத்தடுத்து வீரர்களை இழக்கும் சி.எஸ்.கே அணி!!

ஐ.பி.எல் 11-வது சீசன் நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணி களமிறங்கியதால், சென்னை ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால், மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த சென்னை அணியின் ரசிகர்கள் அடுத்தடுத்த ஏமாற்றங்களை சந்தித்து வருகின்றனர்.

Add Zee News as a Preferred Source

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழர்கள் ஒன்றிணைந்து போராடிவரும் வேளையில், சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக்கூடாது என்று எதிர்ப்புகள் வலுத்ததால், சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டன.

மும்பைக்கு எதிரான முதல் போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்டதால், கேதர் ஜாதவ் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கின் போது, சுரேஷ் ரெய்னா-க்கு காலில் காயம் ஏற்பட்டது. கேதர் ஜாதவை தொடர்ந்து தற்போது ரெய்னாவும் இரண்டு போட்டிகளில் இருந்து வெளியேறினார். 

இந்நிலையில், கடுமையான முதுகுவலி காரணமாக அடுத்த போட்டியில் தோனி களமிறங்குவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்றைய போட்டியில் தோனி முதுகுவலியால் அவதிப்பட்டுள்ளார். இருந்தாலும் முதலுதவி சிகிச்சை பெற்று நேற்று விளையாடினார். இதையடுத்து, தோனி ஒரு போட்டியில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியானது. ஆனால், அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Trending News