7th Pay Commission latest news: 2021 ஜனவரி முதல் ஜூன் வரையிலான அகவிலைப்படி அறிவிப்புக்காக காத்திருக்கும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய தொழிலாளர் அலுவலகம் AICPI-யின் (அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு) தரவு, மத்திய அரசு குறைந்தபட்சம் 4 சதவீத DA அதிகரிப்பை அறிவிக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. இந்த SICPI தரவு அறிவிக்கப்பட்ட பின்னர், மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு தொடர்பான விஷயங்கள் இப்போது தெளிவாகிவிட்டன.
COVID-19 லாக்டௌனின் போது ஜூன் 2021 வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு DA-வை முடக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட மத்திய அரசு இந்த முடிவை எடுத்தது. இந்த DA முடக்க அறிவிப்பில், வழக்கமான நேரத்தில் DA உயர்வை அறிவிப்பதாகவும், ஆனால் சம்பள உயர்வு ஜூன் 2021 க்குப் பிறகுதான் நடக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
ALSO READ: ஓய்வூதிய சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி! முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!
7th Pay Commission சம்பள உயர்வு மிக விரைவில்
2020 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கு 4 சதவீத DA உயர்வு மற்றும் 2020 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு 7 வது ஊதியக்குழுவின் கீழ் எதிர்பார்க்கப்படும் 4 சதவீத டிஏ உயர்வு மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) மாத சம்பளத்தில் சேர்க்கப்படாது. இருப்பினும், அறிவிக்கப்பட்ட DA உயர்வு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் சேர்க்கப்பட்டால், அவர்களின் ஊதியத்தில் பெரும் அதிகரிப்பு இருக்கும். ஏனெனில் ஊழியர்களின் DA-வில் கூடுதலாக 8 சதவீதம் உயர்வு இருக்கும்.
அகவிலைப்படியைத் (Dearness Allowance) தவிர, DA மீண்டும் அளிக்கப்படுவதால், மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படி (Travel Allowance) உயரும். ஏழாவது ஊதியக்குழு விதிகளின்படி, அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படியும் DA உயர்வுடன் ஒத்திசைந்து இருக்கும். எனவே, மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத DA-வை மையம் அறிவித்தால், ஊழியர்களின் அகவிலைப்படி மட்டுமல்ல, அதே அளவில் பயணப்படியும் அதிகரிக்கும்.
தற்போது, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 17 சதவீதமாகும். DA மீண்டும் அளிக்கப்பட்டவுடன், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து குறைந்தது 25 சதவீதமாக (17 + 4 + 4) அதிகரிக்கும்.
ALSO READ: LPG சிலிண்டர் முன்பதிவு செய்யும் முறையில் புதிய மாற்றம் - முழு விவரம் இதோ
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR