7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் அளித்தது அரசு

பொதுவாக எல்.டி.சி கிளெயிம்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 க்கு முன்னர் தீர்க்கப்படுகின்றன. ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, மத்திய அரசு அதன் தேதியை நீட்டித்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 10, 2021, 12:14 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது.
  • LTC தொகையை கோருவதற்கான கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் அளித்தது அரசு title=

7th Pay Commission Latest News:  மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது. இதுவரை, விடுப்பு பயண சலுகையை (LTC Special Cash Package) பெற்றுக்கொள்ளாத ஊழியர்களுக்கு, இந்த கொடுப்பனவைப் பெற, மோடி அரசாங்கம் மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளதுள்.

நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தின்படி, எல்.டி.சி தீர்வு தொடர்பான கிளெயிம்கள் மீது 2021 மே 31 க்கு அப்பாலும் (முன்பு இது கல வரம்பாக இருந்தது) பரிசீலிக்கப்படும் என்று அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்த தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது

செலவுத் துறை அலுவலக மெமோராண்டத்தின் படி, 'பில்கள் / கிளெயிம்கள் ஆகியவற்றை தீர்ப்பதற்கான தேதியை நீட்டிப்பது தொடர்பாக எங்கள் துறைக்கு கடிதங்கள் வந்துள்ளன. கொரோனா வைரஸ் நெருக்கடியால் பல சிரமங்களை எதிர்கொண்டதாக மக்கள் மேற்கோள் காட்டியுள்ளனர். இந்த சூழ்நிலையில், அமைச்சகம் நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்கு அப்பாலும் கிளெயிம்களை பரிசீலிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பொதுவாக எல்.டி.சி கிளெயிம்கள் (LTC Claim) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 க்கு முன்னர் தீர்க்கப்படுகின்றன. ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, மத்திய அரசு அதன் தேதியை நீட்டித்துள்ளது.

ALSO READ: 7th Pay Commission பம்பர் செய்தி: செப்டம்பரில் கிடைக்கும் டி.ஏ அரியர் தொகை

மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி

இது தொடர்பாக மோடி அரசு (Modi Government) உத்தரவு பிறப்பித்துள்ளது. எல்.டி.சி பண வவுச்சர் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் கோரிக்கை மே 31 தேதிக்கு பிறகும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, பலரால் பில்களை சம்ர்ப்பிக்க முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

எல்.டி.சி சிறப்பு பண தொகுப்பை பயன்படுத்த மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.

எல்.டி.சி பண வவுச்சர் திட்டம் என்றால் என்ன?

மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Empoyees) எல்.டி.சி திட்டத்தின் நன்மைகள் கிடைக்கின்றன. ஒரு ஊழியர் ஒரு நிதியாண்டுக்கு ஒரு முறை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். குடும்பத்துடன் இரண்டு முறை சொந்த ஊருக்கு செல்லவும் விலகு அளிகப்படுகின்றது. 

எல்.டி.சி-யில் விமானப் பயணம் மற்றும் ரயில் பயணச் செலவுகளையும் ஊழியர்கள் பெறுகிறார்கள். இந்த முறை கொரோனா வைரஸ் காரணமாக, எல்.டி.சி பண வவுச்சர் திட்ட கிளெய்மிற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அரியர் நிலுவை கிடைக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News