புதுடெல்லி: இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் அட்டை மூலம் பல அரசு திட்டங்களில் சேரலாம். நாட்டு மக்களில் பலர் நீண்ட காலத்திற்கு முன்பே ஆதார் அட்டையைப் பெற்றிருக்கிறார்கள். சில காரணங்களால் அவர்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை இழந்திருந்தால், அதற்காக அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இப்போது மிகவும் எளிய முறையில் நீங்கள் ஆதார் அட்டையில் உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்கலாம்.
மொபைல் எண்ணை ஆதாரில் புதுப்பிப்பதற்கான செயல்முறை
- உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க, நீங்கள் அருகிலுள்ள ஆதார் அட்டை மையத்திற்குச் செல்ல வேண்டும்.
- இப்போது மொபைல் எண்ணைப் புதுப்பிக்க உங்களுக்கு எந்த வகையான ஆவணமும் தேவையில்லை.
- நீங்கள் அருகிலுள்ள ஆதார் அட்டை மையத்திற்குச் சென்று உங்கள் பயோமெட்ரிக் விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
மேலும் படிக்க | வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி? எந்த ஆவணங்கள் தேவை
- அங்கு நியமிக்கப்பட்ட பணியாளர் உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிப்பார்.
- ஆதார் அட்டை மையத்தில், அங்கு நியமிக்கப்பட்ட பணியாளரிடம் உங்கள் ஆதார் அட்டை எண்ணை மட்டும் தெரிவிக்க வேண்டும்.
மொபைல் எண்ணை அப்டேட் செய்வதன் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்
- ஆதார் அட்டையில் மொபைல் எண்ணைப் புதுப்பிப்பதன் மூலம், அரசின் பல திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- உங்களிடம் பான் கார்டு இருந்தால், ஆதார் அட்டை எண்ணைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே எந்த வங்கியிலும் ஆன்லைன் கணக்கைத் தொடங்கலாம்.
பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வங்கிக் கணக்கைத் திறக்கும் வாய்ப்பை வழங்குகின்றன. டிஜிட்டல் வங்கிக் கணக்கைத் தொடங்க, உங்கள் ஆதார் அட்டை எண் மற்றும் பான் கார்டு எண்ணை உள்ளிட வேண்டும்.
ஆதார் அட்டை எண்ணின் உதவியுடன், எப்போது வேண்டுமானாலும் UIDAI இணையதளத்தில் இருந்து உங்கள் MAadhaar ஐ பதிவிறக்கம் செய்யலாம். இந்த MAadhaar செல்லுபடியாகும் மற்ற அடையாளச் சான்றுகள் போலவே செல்லுபடியாகும்.
மேலும் படிக்க | ஆதார் மோசடி குறித்த அச்சமா? Masked Aadhaar Card மூலம் பாதுகாப்பாக இருக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ