Aadhaar Card: முகவரியை மாற்றுவது மிகவும் எளிது; ஆவணம் எதுவும் தேவையில்லை

முகவரி சான்றுக்கான முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள், ஆதார் அட்டையில் முகவரியை எப்படி மாற்றுவது என்பதை அறிந்து கொள்ளலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 9, 2021, 04:26 PM IST
Aadhaar Card: முகவரியை  மாற்றுவது மிகவும் எளிது; ஆவணம் எதுவும் தேவையில்லை title=

ஆதார் அட்டை நம் வாழ்வின் இன்றியமையாத பகுதியாக மாறிவிட்டது. அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வரும் இந்த காலகட்டத்தில், ஆதார் அட்டை இல்லாமல் வங்கி கணக்கு தொடங்குவது முதல், நமது அன்றாட பணிகள் பலவற்றுக்கு ஆதார் அட்டை மிகவும் தேவையான ஆவணம் ஆகும்.

இந்நிலையில், முகவரி சான்றுக்கான முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள், ஆதார் அட்டையில் (Aadhaar Card) முகவரியை எப்படி மாற்றுவது என்பதை அறிந்து கொள்ளலாம்.

UIDAI-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான uidai.gov.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்து, "My Aadhaar" ஆப்ஷனில் இருந்து  "Update your Aadhaar" என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தங்கள் முகவரியை புதுப்பிக்கலாம்.

‘Update Demographics Data Online’ என்பதைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் முகவரியைப் புதுப்பிக்க இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும்: ஆவணங்கள் இருக்கும் நிலையில் புதுப்பிக்க ‘Update Address with Address Proof’ மற்றும் ஆவணங்கள் இல்லாதவர்கள் ரகசியக் குறியீடு வழியாக முகவரியைப் புதுப்பிக்க ‘Update Address via Secret Code' என்ற ஆப்ஷனும் இருக்கும்

முகவரி சான்றுக்கு முறையான ஆவணங்கள் இருந்தால், நீங்கள் முதல் தேர்வை தேர்வு செய்யலாம், ஆனால் இல்லாதவர்கள், இரண்டாவது ஆப்ஷனை பயன்படுத்தலாம்.

இந்த நடைமுறையில் கீழ்,  முகவரி சரிபார்ப்பு கடிதத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க உங்கள் முகவரியை உறுதிபடுத்தும் ஒரு நபர் மூலம் செயல்முறையை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட அளவுகோல்களுடன் பொருந்தினால் மட்டுமே உங்கள் முகவரியை புதுப்பிக்க முடியும். இவை பின்வருபவை:

ALSO READ |Aadhaar Card: 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறுவது எப்படி..!

முகவரியை மாற்றுபவர் மற்றும்  அவரது முகவரியை உறுதிபடுத்துபவர் என இருவரின், மொபைல் எண்கள் அவரவர் ஆதார் எண்களில் பதிவு செய்யப்பட வேண்டும்.

முகவரியை உறுதி செய்பவர் முகவரி தரவுத்தளத்தில் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ALSO READ | Aadhaar அட்டையில் உள்ள போட்டோ பிடிக்கவில்லையா; நொடியில் மாற்றலாம்..!!

எந்த ஆவணங்களும் இல்லாமல் உங்கள் ஆதார் அட்டையைப் புதுப்பிப்பதற்கான செயல்முறை பின்வருமாறு:

"இரகசியக் குறியீடு வழியாக முகவரியைப் புதுப்பிக்கவும்" ("Update Address via Secret Code") என்ற தலைப்பில் முகவரியை உறுதிபடுத்துபவர் ஆதார் உள்ளிடவும். ஒரு SRN (Service Request Number) உங்களுக்கு ஒதுக்கப்படும்.

முகவரியை உறுதிபடுத்துபவர் அவருடைய ஆதார் உடன் வெரிபை செய்ய, அவர் அல்லது அவள் தங்களுக்கு வரும் லிங்கை கிளிக் செய்வதன் மூலம் அங்கீகாரம் வழங்கப்படும்.

அதன் பிறகு, நீங்கள் OTP உடன் இரண்டாவது எஸ்எம்எஸ் பெறுவீர்கள், அதை நீங்கள் நிரப்ப வேண்டும், அதே போல் கேப்ட்சா (captcha) பதிவு செய்து வெரிபை செய்ய வேண்டும். அது சரிபார்க்கப்பட்டவுடன் எஸ்எம்எஸ் மூலம் சேவை கோரிக்கை எண்ணை (Service Request Number - SRN) பெறுவீர்கள்.

ALSO READ | DigiLocker: DL, PAN, ஆதார், பாஸ்போர்ட், போன்றவை தொலையும் என்ற கவலை இல்லை

அந்த குறிப்பிட்ட SRN உடன் உள்நுழைந்து, முகவரியை மாற்றி, அதை புதுப்பித்து, முகவரியை வெரிபை செய்து உறுதி  செய்பவர் வழங்கிய அனுமதியுடன் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர், நீங்கள் பெறும் முகவரி சரிபார்ப்பு கடிதத்தில் ரகசிய குறியீடு குறிப்பிடப்பட்டிருக்கும். SSUP போர்ட்டலில் உள்நுழைந்து உங்கள் முகவரியை புதுப்பிக்க ரகசிய குறியீட்டைப் (Secret Code) பயன்படுத்தவும்.

தகவல்களை சப்மிட் செய்யும் முன் புதிய முகவரியை சரியாக பதிவிட்டுள்ளீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும். உங்கள் கோரிக்கை ஸ்டெடஸ்ஸை சரிபார்க்க பயன்படுத்தக்கூடிய ஒரு URN வழங்கப்படும்.

ALSO READ | Aadhaar - DL link: வீட்டில் இருந்த படியே, ஆதார் - ஓட்டுநர் உரிமத்தை நொடியில் இணைக்கலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News