ALERT இறந்த பின்பு, ஒருவரின் ஆதார் எண் என்னவாகும்? தவறாக பயன்படுத்த வாய்ப்பு!

இறப்புப் பதிவை ஆதார் உடன் இணைக்கும் திட்டம் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. ஒருவர் இறக்கும் போது, ​​அவரது ஆதார் எண் செயலற்றதாக மாற வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 27, 2020, 03:56 PM IST
ALERT இறந்த பின்பு, ஒருவரின் ஆதார் எண் என்னவாகும்?  தவறாக பயன்படுத்த வாய்ப்பு! title=

புது டெல்லி: ஒருவர் இறந்துவிடுகிறார் என்றால், அவர்களின் 12 இலக்க ஆதார் எண் (Aadhaar Number) என்னவாகும்? ஒருவேளை ஒருவர் இறந்த பின்பு, அவரின் ஆதார் அட்டை தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. இப்போது, ​​இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (யுஐடிஏஐ - UIDAI), ஒரு நபர் இறந்தவுடன், அவரின் ஆதாரை அட்டையை செயலற்றதாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

இப்போதைக்கு, ஒரு மாநிலத்தில் எவ்வளவு இறப்பு ஏற்படுகிறது என பதிவு செய்யும் இந்திய பொது பதிவாளர் அமைப்பு (Registrar General of India) மற்றும் யுஐடிஏஐ களஞ்சியங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லாததால் இறந்தவர்கள் குறித்து ஆதார் தரவுத்தளத்தில் புதுப்பிக்கப்படவில்லை. 

உதாரணமாக, தெலுங்கானாவில் (Telangana) இந்திய பொது பதிவாளர் பயன்படுத்திய மென்பொருளை விட, இவர்களிடம் வேறுபட்ட மென்பொருள் (Software) உள்ளது. இதனால் தரவுகள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதில் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இறப்புப் பதிவை ஆதார் உடன் இணைப்பதற்கான திட்டத்தை யுஐடிஏஐ இப்போது முன்வைத்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ALSO READ | Aadhaar - Pan Card இணைக்க வில்லை என்றால்.. உங்கள் பான் கார்டு செயலாற்றதாகிவிடும்

"ஒருவர் இறக்கும் போது, ​​அவரது ஆதார் எண் செயலற்றதாக மாற வேண்டும். தற்போது, ​​இறந்தவர்களை அடக்கம் செய்யும் உறவினர்கள் இறப்பு குறித்து யுஐடிஏஐ (UIDAI) அமைபுக்கு தெரிவிப்பதில்லை. இறப்பு பதிவேடு மற்றும் ஆதார் அட்டையுடன் எந்த தொடர்பும் இல்லை என்று யுஐடிஏஐ அதிகாரி ஒருவர் கூறினார்.

இறப்புப் பதிவை ஆதார் உடன் இணைக்கும் திட்டம் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இறப்பு பதிவகம் மற்றும் ஆதார் மென்பொருளுடன் இணைக்கப்பட்டிருந்தால், ஒரு நபர் இறக்கும் போதெல்லாம், அது நம் கணினியில் காண்பிக்கப்படும். தற்போது வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றன என்று யுஐடிஏஐ அதிகாரி கூறினார்.

Trending News