புதுடெல்லி: தாமிரம், அலுமினியம் மற்றும் எஃகு போன்ற மூலப்பொருட்களின் விலை அதிகரித்து வருவதாலும், சரக்கு போக்குவரத்தின் வாடகைகளும் உயர்வதாலும், LED TV, AC, வாஷிங் மெஷின்கள் போன்ற வீட்டு பொருட்களின் விலைகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 10 சதவீதம் வரை உயரக்கூடும்.
இது தவிர, டிவி பேனல்களின் விலைகளும் (ஓப்பன் சேல்) வழங்கல் இல்லாததால் இரு மடங்காக அதிகரித்துள்ளன என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். கச்சா எண்ணெய் விலை உயர்வுடன், பிளாஸ்டிக்கும் விலை உயர்ந்ததுள்ளது.
எல்ஜி (LG), பானாசோனிக் (Panasonic) மற்றும் தாம்சன் (Thomson) போன்ற உற்பத்தியாளர்களும் ஜனவரி முதல் கண்டிப்பாக தங்கள் பொருட்களின் விலைகளை உயர்த்துவார்கள் என்றும் கூறப்படுகிறது. சோனி (SONY) நிறுவனம் இன்னும் நிலைமையை மறுபரிசீலனை செய்து வருவதாகவும், இன்னும் எந்த நிலையான முடிவையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
பானாசோனிக் (Panasonic) இந்தியாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மணீஷ் சர்மா, "எதிர்காலத்தில் பொருட்களின் விலை உயர்வு எங்கள் தயாரிப்புகளின் விலையை பாதிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார். “ஜனவரி மாதத்தில் விலைகள் 6-7 சதவிகிதம் உயரும் என்றும் நிதியாண்டின் முதல் காலாண்டில் 10-11 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் நான் மதிப்பிடுகிறேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ALSO READ: 5G Smartphones: 2021-ல் வரவிருக்கும் அட்டகாசமான ஃபோன்கள் இவைதான்
எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் (LG) இந்தியாவும் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஏழு முதல் எட்டு சதவிகிதம் வரை விலைகளை உயர்த்தப் போகிறது. எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் துணைத் தலைவர் (வீட்டு உபகரணங்கள்) விஜய் பாபு, “ஜனவரி முதல் எல்.ஈ.டி டிவி (LED TV), எலக்ட்ரானிக்ஸ் இயந்திரங்கள், குளிர்சாதன பெட்டிகள் போன்ற அனைத்து பொருட்களின் விலையையும் ஏழு முதல் எட்டு சதவீதம் வரை உயர்த்தப் போகிறோம்.
மூலப்பொருட்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளது. இது தவிர, கச்சா எண்ணெயின் (Crude Oil) விலையும் அதிகரித்து வருகிறது. எனவே பிளாஸ்டிக் பொருட்களின் விலையும் பெருமளவில் அதிகரித்துள்ளது." என்றார்.
சோனி இந்தியா விலை உயர்வு குறித்த நிலைமையை மறுபரிசீலனை செய்து வருகிறது, இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சோனி இந்தியா நிர்வாக இயக்குனர் சுனில் நய்யரிடம் கேட்டபோது, “இப்போதைகக்கு விலைகள் உயர்த்தப்படாது. இப்போதைக்கு நாங்கள் காத்திருந்து முடிவெடுக்க உள்ளோம். நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கும் சப்ளை பக்கத்தைப் பார்க்கிறோம். நிலைமை தெளிவாக இல்லை. நாங்கள் இன்னும் இது குறித்து முடிவு செய்யவில்லை.” என்றார். குறிப்பாக டிவி உற்பத்தியில், பேனல் விலைகளும் சில மூலப்பொருட்களின் விலைகளூம் அதிகரித்துள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும், மூலப் பொருட்களின் விலைகளில் அதிக மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் தக்கம் அடுத்த ஆண்டு தெரியும் என்பது இப்போது தெளிவாகியுள்ளது.
ALSO READ: Tech News: 2021-ல் வருகின்றன OnePlus-ன் இரண்டு புதிய ஃபோன்கள்: முழு விவரம் உள்ளே
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR