வாழ்க்கையை புரட்டிப் போடும் கால சர்ப்ப தோஷம்; சில எளிய அமாவாசை பரிகாரங்கள்!

ஜோதிட சாஸ்திரத்தில், ஜாதகத்தில் காணப்படும் பல வகையான தோஷங்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஜாதகத்தில் உள்ள சில தோஷங்கள் வாழ்க்கையில் பெரும் பிரச்சனைகளை உருவாக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 31, 2022, 11:11 AM IST
  • ஜோதிட சாஸ்திரத்தில் பரிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • சில தோஷங்கள் வாழ்க்கையில் பெரும் பிரச்சனைகளை உருவாக்கும்.
  • அமாவாசை நாளில் அன்னதானம் செய்வது சிறப்பு.
வாழ்க்கையை புரட்டிப் போடும் கால சர்ப்ப தோஷம்; சில எளிய அமாவாசை பரிகாரங்கள்! title=

ஜோதிட சாஸ்திரத்தில், ஜாதகத்தில் காணப்படும் பல வகையான தோஷங்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஜாதகத்தில் உள்ள சில தோஷங்கள் வாழ்க்கையில் பெரும் பிரச்சனைகளை உருவாக்கும். அதில் ஒன்று கால சர்ப்ப தோஷம் ஜோதிட சாஸ்திரத்தில் இதற்கான பரிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

கால சர்ப்ப தோஷம்

ஜாதகத்தில் பிறந்த நேரத்தில் ராகுவும் கேதுவும் ஒன்றாக அமர்ந்தால், கால சர்ப்ப தோஷம் உண்டாகும்.

இந்நிலையில், கால சர்ப்ப தோஷத்திலிருந்து விலக  அமாவாசை நாளில் நீராடுதல் மற்றும் அன்னதானம் செய்வது சிறப்பு வாய்ந்தது.  அதுவும் அமாவாசையான இன்றைய தினத்தில்,  4 மிகவும் மங்களகரமான தற்செயல் நிகழ்வுகள் நடக்கவுள்ளன. இந்த நாளில் கால சர்ப் தோஷம்  மட்டுமல்லாது பித்ரு தோஷத்திலிருந்தும் விடுபட சிறப்பு பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.

பஞ்சாங்கப்படி இம்முறை அமாவாசை திதி மார்ச் 31 மதியம் 12.22 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 11:53 மணிக்கு முடிவடையும். அமாவாசைக்கு ஸ்நானம் செய்து தர்ப்பணம் செய்வது, தானம் செய்வது சிறந்த பலனை கொடுக்கிறது.  

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பண வரவும் வெற்றியும் ஏற்படும்..!! 

கால் சர்ப் தோஷம் மற்றும் பித்ரு தோஷத்தை போக்க பரிகாரம்

அமாவாசை அன்று சிவனை வழிபடுவதால் கால சர்ப்ப தோஷம் நீங்கும். இந்த நாளில், சிவன் கோவிலில் ருத்ராபிஷேகத்துடன், சிவலிங்கத்திற்கு பால் மற்றும் கற்கண்டை அர்ப்பணம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் சிவன் அருளால் கால் சர்ப்ப தோஷம் நீங்கும்.

அமாவாசை அன்று புனித நதியில் நீராடுவது மிகவும் பலன் தரும். நீராடியதும் வெள்ளியால் செய்யப்பட்ட நாகம் அல்லது நாக சிலை ஆகியவற்றை வழிபடுவதும் சிறந்த பலனைத் தருக். பின்னர் கால சர்ப்ப தோஷிலிருந்து விடுதலை பெற பிரார்த்தனை செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் கால சர்ப்ப தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

இது தவிர, சைத்ர அமாவாசை அன்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும் பலன் தரும். இதைச் செய்வதன் மூலம் ஒருவர் கால் சர்ப் தோஷிலிருந்து விடுதலை பெறுகிறார். அதே சமயம் கால சர்ப்ப தோஷம் நீங்க ராகுவையும் வழிபடுகிறார்கள். சிவன் கோவிலில் ராகுவை வழிபடுவது நன்மை தரும்.

பஞ்சாங்கத்தின்படி,   அமாவாசை அன்று காலையில் பிரம்மயோகம் உருவாகிறது. இது தவிர, இந்திர யோகத்தின் அரிய தற்செயல் நிகழ்வும் நடக்கிறது. காலை 10.40 மணி முதல் சர்வார்த்த சித்தி யோகம், அமிர்த சித்தி யோகமும் உள்ளது. இந்த யோகங்களில் சுப காரியங்கள் வெற்றி பெறும். இதனுடன், அமாவாசை அன்று பாத்ரபதா மற்றும் ரேவதி நட்சத்திரங்களின் தற்செயல் நிகழ்வும் உள்ளது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனியின் வீட்டிற்கு விருந்தினராக செல்லும் செவ்வாய் பகவான்! துக்கப்படப் போகும் 7 ராசிகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News