அதிரடியாக விலை குறைந்த ஐபோன் 12! உடனே முந்துங்கள்!

ஆப்பிள் ஐபோன் 12 ஆனது ஆன்லைன் ஸ்டோரில் பல்வேறு சலுகைகளுடன் வெறும் 37,900 ரூபாய்க்கு கிடைக்கிறது.

Written by - RK Spark | Last Updated : Mar 28, 2022, 08:26 PM IST
  • ஐபோன் 12 விலையை குறைத்த நிறுவனம்.
  • ஆன்லைன் தளங்களில் அதிரடி குறைப்பு.
  • ஐபோன் 13 அறிமுகப்படுத்தியதால் 12-ன் விலை குறைப்பு.
அதிரடியாக விலை குறைந்த ஐபோன் 12! உடனே முந்துங்கள்! title=

உங்கள் ஸ்மார்ட்போன் தரத்தை மேம்படுத்த நினைத்தாலோ அல்லது ஆப்பிள் ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தாலோ இது அற்புதமான நேரமாக கருத்தப்படுகிறது.  ஐஸ்டோரில் ஆப்பிள் ஐபோன் 12 ஆனது மிக குறைவான விலையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.  கேஷ்பேக், வங்கி கார்டு,  எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி போன்றவற்றின் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த ஆப்பிள் ஐபோன் 12 ஐ ரூ.28,000 வரை வாங்கிக்கொள்ள முடியும். 

TECH

மேலும் படிக்க | ஐபிஎல் முன்னிட்டு ஒரு வருடத்திற்கு ஹாட்ஸ்டார் சந்தா இலவசம்

ஆப்பிள் ஐபோன் 12 ஆனது ஐஸ்டோரில் ரூ.65,990 விலையில் கிடைக்கிறது, இருப்பினும் சில்லறை விற்பனையில் உடனடி தள்ளுபடியாக ரூ. 5000 வழங்கப்படுகிறது.  அதுமட்டுமில்லாமல் கோடக் மஹிந்திரா டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆப்பிள் ஐபோன் 12 ஐ வாங்குபவர்களுக்கு கூடுதலாக ரூ.5000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.  மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் சலுகையில் மூலம் ஆப்பிள் ஐபோன் 12 ஐ வாங்குவதன் மூலம் அதிரடி தள்ளுபடியை பெறலாம். எடுத்துக்காட்டாக, ஒருவர் பழைய ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் 64 ஜிபி ஸ்மார்ட்போனை, ஐஸ்டோரின் பார்ட்னர் இணையதளமான கேஷிஃபை.இன் அல்லது சர்விஃபை போன்றவற்றில் ட்ரேடிங் செய்வதன் மூலம் ரூ.18,000 வரை பெறமுடியும்.  வங்கி க்ரெடிட் கார்டு, கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை பயன்படுத்துவதன் மூலம் கிட்டத்தட்ட  ரூ.28,000 தள்ளுபடி செய்யப்பட்டு ஆப்பிள் ஐபோன் 12ஐ ரூ.37,900க்கு வாங்கலாம். 

ஆப்பிள் ஏ14  பயோனிக் சிப் மூலம் நியூரல் எஞ்சினுடன் சேர்த்து இயக்கப்படுகிறது.  இது சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவைக் கொண்டிருப்பதோடு, பாதுகாப்பான ஃபேஸ் ஐடியுடன் வருகிறது.  இந்த மொபைலில் கேமரா அம்சத்தை பொறுத்தவரை 12 MP ட்ரூ டெப்த் உடன் போர்ட்ரெய்ட் மோடில் 4கே வீடியோ மற்றும் ஸ்லோ-மோஷன் வீடியோவை பதிவு செய்யும் திறன் கொண்டுள்ளது.  மேலும் இந்த ஸ்மார்ட்போன் தண்ணீர் மற்றும் தூசி போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் திறனையும், வேகமான சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | புதிய சோஷியல் மீடியா தளத்தை தொடங்குகிறாரா எலான் மஸ்க்? அவரே கூறிய பதில்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News