இறந்த கேரள யானைக்கு நீதி கோரி பீகாரைச் சேர்ந்த கலைஞர் மணல் கலையை உருவாக்கம்

கேரளாவில் ஒரு கர்ப்பிணி காட்டு யானை கொல்லப்படுவது நாடு தழுவிய சீற்றத்தைத் தூண்டியுள்ளது, மக்கள் இதை ஒரு வேதனையான சம்பவம் என்று அழைக்கின்றனர், இது மனிதகுலத்தை அவமானப்படுத்தியுள்ளது.

Last Updated : Jun 4, 2020, 03:28 PM IST
    1. கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து உணவளித்தவர்கள் மீது FIR பதிவு
    2. இறந்த விலங்குக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அசோக் கலையை வரைந்தார்
    3. கேரளாவில் பட்டாசுகள் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு கர்ப்பிணி யானை மரணம்
இறந்த கேரள யானைக்கு நீதி கோரி பீகாரைச் சேர்ந்த கலைஞர் மணல் கலையை உருவாக்கம் title=

கேரளாவில் ஒரு காட்டு  கர்ப்பிணி யானை கொல்லப்படுவது நாடு தழுவிய சீற்றத்தைத் தூண்டியுள்ளது, மக்கள் இதை ஒரு வேதனையான சம்பவம் என்று அழைக்கின்றனர், இது மனிதகுலத்தை அவமானப்படுத்தியுள்ளது. பீகாரின் சாப்ராவைச் சேர்ந்த மணல் கலைஞர் அசோக், இறந்த மிருகத்தை விநாயகர் உடன் சித்தரித்தார்.

இறந்த விலங்குக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அசோக் கலையை வரைந்தார். சாப்ராவில் உள்ள சீதி காட்டில் இந்த கலை உருவாக்கப்பட்டுள்ளது.

READ | கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து உணவளித்தவர்கள் மீது FIR பதிவு

 

இந்த சம்பவம் பாலக்காடு மாவட்டம் மலப்புரத்தில் நடந்துள்ளது. காட்டு கர்ப்பிணி யானை உணவு தேடி கிராமத்திற்கு வந்த நிலையில், யாரோ பட்டாசுகள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை உணவாக தந்துள்ளனர். நம்பி வாங்கி உண்ட யானை, பழத்தை கடிக்கும் போது வெடி மருந்து வெடிக்க, அதன் வாய் மற்றும் நாக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இன்னும் 18 அல்லது 20 மாதங்களுக்குள் குட்டியை ஈனும் நிலையில் யானை இருந்தது. 

வலியுடன் கிராமத்தின் தெருக்களில் ஓடியபோதும் கர்ப்பிணி யானை யாரையும் தாக்கவில்லை, எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. பட்டாசு வாய் மற்றும் நாக்கில் ஏற்படுத்திய படுகாயத்தால் அந்த யானை உணவு உட்கொள்ள முடியாமல் சில நாட்கள் கழித்து அந்த யானை உயிரிழந்தது. காயமடைந்த கர்ப்பிணி யானையை ஆற்றில் இருந்து வெளியேற்ற வன அதிகாரிகள் இரண்டு கும்கி யானைகளை அழைத்து வந்தனர், ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. அவளை மீட்க பல மணிநேர முயற்சிகளுக்குப் பிறகு, காயமடைந்த கர்ப்பிணி யானை தண்ணீரில் இறந்தது.

READ | கேரளாவில் பட்டாசுகள் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு கர்ப்பிணி யானை மரணம்

 

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்தச் செயலுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்தார்.

Trending News