Astro: சனி-ராகு-கேது தோஷங்கள் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

அஞ்சனையின் மைந்தனான ஹனுமனை துதித்தால், வாழ்க்கையின் அனைத்து சங்கடங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 14, 2022, 05:37 PM IST
Astro: சனி-ராகு-கேது தோஷங்கள் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் title=

கம்பர் பகவான் ஹனுமனைப் போற்றிப் பாடுகையில், அஞ்சனையின் மைந்தனாகத் தோன்றியவன், ஐம்புலன்களை வென்றவன், சூரியதேவனிடம் வேதங்களின் பொருள் உணர்ந்தவன், ராமபிரானின் மலரடிகளை மறவாத மனம் கொண்டவன், நித்திய சிரஞ்சீவியாகத் திகழ்பவன் என போற்றுகிறார்.

இந்த கலியுகத்தில் ஹனுமனை வழிபடுவது மூலம் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என நம்பப்படுகிறது. அனுமனின் திருநாமத்தை சொல்லி வழிபட்டாலே துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.  இந்நிலையில் சனி-ராகு-கேது தோஷங்கள் நீங்க உங்கள் ராசியின் படி, எந்த வகையிலான பரிகாரங்கள் உங்களுக்கு பலனளிக்கும் என்பதை  அறிந்து கொள்ளலாம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் அனுமன் கவசம் பாராயணம் செய்தால்  சனி-ராகு-கேது தோஷங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழலாம். 

ரிஷபம்: ஹனுமான் கோவிலிலோ அல்லது வீட்டிலோ ராமாயணத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்

மிதுனம்:  ஆரண்யக் காண்டம் பாராயணம் செய்யவும். இதற்குப் பிறகு, ஹனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றிவதோடு, பசுவுக்கு உணவளிக்கவும்.

மேலும் படிக்க | ராகு பெயர்ச்சி 2022: ராகுவின் தாக்கத்தில் இருந்து விடுபட சில பரிகாரங்கள்

கடகம்: கடக ராசிக்காரர்கள் ஹனுமான்  கவசத்தை பாராயணம் செய்து, மலர்களால் ஹனுமனை பூஜித்து,  அந்த மலர்களை நீர் நிலைகளில் சேர்க்கவும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள்  தினமும் ஹனுமான் சாலீசா பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் சுந்தரகாண்டம் பாராயணம் செய்ய வேண்டும்.  ஹனுமனின் படத்தின் முன் நெய் விளக்கை ஏற்றவும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களும் சுந்தர காண்டம் பாராயணம் செய்ய வேண்டும். அதன் பிறகு, ஹனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கவும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் ஹனுமனின் ஆசி பெற, ஹனுமான் அஷ்டகம் பாராயணம் செய்ய வேண்டும்.

தனுசு:  தனுசு ராசிக்காரர்கள் அயோத்தியா காண்டத்தை பாராயணம் செய்ய வேண்டும். மேலும், ஹனுமானுக்கு வெண்ணை சாற்றி வழிபடவும்.

மகரம்: மகர ராசிக்காரர்கள்  கிஷ்கிந்தா காண்டம் பாராயணம் செய்ய வேண்டும். மேலும், ஹனுமானுக்கு சிவப்பு பயறு பிரசாதம் செய்து நைவேத்தியம் செய்யலாம். அதோடு மீன்களுக்கு உணவளிக்கவும்.

கும்பம்:  கும்ப ராசிக்காரர்கள் உத்தர காண்டம் பாராயணம் செய்யவும். மேலும், ஹனுமான் இனிப்பு வகை ஒன்றை தயாரித்து பிராசாதத்தை விநியோகிக்கவும். அதை எறும்புகளுக்கு உணவளிப்பதும் நல்ல பலனைக் கொடுக்கும்.

மீனம்: மீன ராசிக்காரர்கள் ஹனுமன் சாலீசா பாராயணம் செய்ய வேண்டும். அதன் பிறகு, ஹனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | கும்ப ராசியில் பிரவேசிக்கும் சனி பகவான்; நிம்மதி பெருமூச்சு விடும் இரு ராசிகள் 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News