Bank Holidays February 2022: இந்த மாதம் வங்கியில் அதிக வேலை உள்ளதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு உதவியாக இருக்கும். வங்கிக்குச் செல்வதற்கு முன், இந்தச் செய்தியை கண்டிப்பாகப் படியுங்கள். பிப்ரவரி 2022க்கான வங்கி விடுமுறைப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பிப்ரவரி மாதம் எத்தனை நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
பிப்ரவரியில் (February 2022), வங்கிகளுக்கு மொத்தமுள்ள 12 விடுமுறை நாட்களில், 4 ஞாயிற்றுக்கிழமைகள் உள்ளன. மேலும், பல விடுமுறை நாட்கள் தொடர்ந்தும் வரவுள்ளன. எப்படியும், பிப்ரவரியில், மற்ற மாதங்களுடன் ஒப்பிடும்போது நாட்கள் குறைவாகவே இருக்கும். எனினும், 12 நாட்களுக்கு நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மூடப்படாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். வெவ்வேறு மாநிலங்களில் உள்ள விடுமுறைகளையும் ரிசர்வ் வங்கி அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுத்துள்ளது.
இந்த விடுமுறைகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது. அதே நேரத்தில், ரிசர்வ் வங்கியின் (Reserve Bank) வழிகாட்டுதல்களின்படி, ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். வங்கிக்கு சென்று முடிக்க வேண்டிய பணிகளைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு, வங்கிக் கிளைகள் மூடப்படுவதால், அதிக பாதிப்புகள் ஏற்படலாம். வங்கிகளின் விடுமுறை நாட்களை முன்னரே தெரிந்துகொள்வது, அதற்கேற்ப நமது பணிகளை திட்டமிட வழிவகுக்கும். இருப்பினும், ஆன்லைன் வங்கிச் சேவைகள் வார இறுதி நாட்களிலும் தொடர்ந்து செயல்படும். இது வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி தரும் செயல்பாடாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
பிப்ரவரி 2ம் தேதி சிக்கிமில் வங்கிகள் மூடப்பட்டிருந்தன.
பிப்ரவரி தொடக்கத்தில், அதாவது பிப்ரவரி 2 ஆம் தேதி, சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை இருந்தது. இந்த நாளில் அங்கு சோனம் லோசரின் திருவிழா கொண்டாடப்படுகின்றது.
ALSO READ | காசோலை கட்டண முறையில் பெரிய மாற்றம்: தெரிந்து கொள்வது மிக அவசியம்
வசந்த பஞ்சமியும் விடுமுறை
பிப்ரவரி 5ஆம் தேதி வசந்த பஞ்சமி. இத்திருவிழாவில் சனிக்கிழமை சரஸ்வதி பூஜை நடைபெறும். அகர்தலா, புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தாவில் உள்ள வங்கிகள் இந்த நாளில் மூடப்பட்டிருக்கும். இதையடுத்து பிப்ரவரி 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றும் வங்கிகள் செயல்படாது.
பிப்ரவரி 12 இரண்டாவது சனிக்கிழமை
பிப்ரவரி 12 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை. இதற்குப் பிறகு, பிப்ரவரி 13 ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
16 பிப்ரவரி
பிப்ரவரி 16 அன்று குரு ரவிதாஸ் ஜெயந்தி வருகிறது. இந்த நாளில் சண்டிகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
பிப்ரவரி 18
டோல்ஜாத்ரா காரணமாக கொல்கத்தாவில் உள்ள வங்கிக் கிளைகள் இந்த நாளில் மூடப்பட்டிருக்கும்.
பிப்ரவரி 19
சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்தநாளை முன்னிட்டு பேலாபூர், மும்பை (Mumbai) மற்றும் நாக்பூரில் உள்ள வங்கிகள் இந்த நாளில் மூடப்பட்டிருக்கும்.
இந்த நாட்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
இந்த விடுமுறைகள் தவிர, பிப்ரவரி 6, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளிலும், பிப்ரவரி 12 மற்றும் 26 ஆம் தேதிகளில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ALSO READ | NPS: பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு பணியாளர்களுக்கு ரூ.4800 மிச்சம், கணக்கீடு இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR