காசோலை கட்டண முறையில் பெரிய மாற்றம்: தெரிந்து கொள்வது மிக அவசியம்

காசோலையில் மோசடி நடக்காமல் இருக்க வங்கி இந்த விதியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 2, 2022, 10:42 AM IST
  • பிப்ரவரி 1 முதல் காசோலையின் பேமெண்டுக்கு உறுதிப்படுத்தல் கட்டாயமாகிவிட்டது.
  • காசோலை உறுதி செய்யப்படவில்லை என்றால், அது திரும்ப அனுப்பப்படலாம்.
  • வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து தெரிவித்துள்ளது.
காசோலை கட்டண முறையில் பெரிய மாற்றம்: தெரிந்து கொள்வது மிக அவசியம் title=

பேங்க் ஆஃப் பரோடாவின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. வங்கி அதன் சில முக்கிய விதிகளை மாற்றியுள்ளது. வங்கி நேற்று முதல், அதாவது பிப்ரவரி 1 முதல் புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. வங்கியின் இந்தப் புதிய விதியைப் பற்றி வாடிக்கையாளர்களுக்குத் தெரியாவிட்டால், பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். 

காசோலை அனுமதி அமைப்பில் மாற்றங்கள்

செக் கிளியரன்ஸ் (Positive Pay Confirmation) தொடர்பான பேங்க் ஆஃப் பரோடாவின் விதிகள் மாற்றப்பட்டுள்ளன. வங்கி அளித்த தகவலின்படி, பிப்ரவரி 1 முதல் காசோலையின் பேமெண்டுக்கு உறுதிப்படுத்தல் கட்டாயமாகிவிட்டது. காசோலை உறுதி செய்யப்படவில்லை என்றால், காசோலை திரும்ப அனுப்பப்படலாம். இருப்பினும், 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட காசோலைகளுக்குதான் இந்த விதிகள் பொருந்தும்.

வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் கோரிக்கை 

பேங்க் ஆஃப் பரோடா வங்கி (Bank Of Baroda) தனது வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. 'சிடிஎஸ் க்ளியரிங் செய்வதற்கான பாசிடிவ் பே சிஸ்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காசோலையில் மோசடி நடக்காமல் இருக்க வங்கி இந்த விதியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு வழிகளில் விவரங்களை மீண்டும் சரிபார்த்து மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு வங்கி கேட்டுக்கொள்கிறது' என வங்கி தெரிவித்துள்ளது. 

இதனுடன், பாங்க் ஆப் பரோடா, வாடிக்கையாளர்களுக்கு பாசிடிவ் பே கன்ஃபர்மேஷனுக்காக 8422009988 என்ற மெய்நிகர் மொபைல் எண்ணின் வசதியையும் வழங்கியுள்ளது. இந்த புதிய விதியின்படி, சிபிபிஎஸ் எழுதிய பிறகு, கணக்கு எண், காசோலை எண், காசோலை தேதி, காசோலை கணக்கு, பரிவர்த்தனை குறியீடு, பணம் பெறுபவரின் பெயர் ஆகியவற்றை 8422009988 என்ற எண்ணுக்கு அனுப்பினால் உறுதிப்படுத்தப்படும். இது தவிர, வாடிக்கையாளர்கள் 1800 258 4455 மற்றும் 1800 102 4455 என்ற கட்டணமில்லா எண்ணிலும் அழைக்கலாம்.

ALSO READ | 7th Pay Commission சூப்பர் செய்தி: இந்த ஊழியர்களின் அகவிலைப்படியில் 14% அதிகரிப்பு!!

பாசிடிவ் பே சிஸ்டம் என்றால் என்ன? 

பாசிடிவ் பே சிஸ்டம் (Positive Pay System) என்பது காசோலை ட்ரங்கேஷன் முறையின் கீழ் காசோலைகளை கிளியர் செய்வதில் மோசடிகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதாகும். காசோலை ட்ரங்கேஷன் அமைப்பு என்பது காசோலைகளை கிளியர் செய்யும் ஒரு செயல்முறையாகும். இது காசோலைகளை சேகரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. 

நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வங்கிகளுக்கு செக் ட்ரங்கேஷன் சிஸ்டத்தில் (சிடிஎஸ்) பாசிடிவ் பே ஊதிய வசதியை வழங்குகிறது. 50 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை காசோலை மூலம் செலுத்தினால் இந்த முறை பொருந்தும்.

பாசிடிவ் பே அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?

இந்த அமைப்பின் மூலம், எஸ்எம்எஸ், மொபைல் ஆப், இன்டர்நெட் பேங்கிங் (Internet Banking) மற்றும் ஏடிஎம் மூலம் காசோலை தகவல்களை வழங்க முடியும். காசோலையை செலுத்தும் முன் இந்த விவரங்கள் மீண்டும் சரிபார்க்கப்படும். அதில் ஏதேனும் முரண்பாடு காணப்பட்டால், காசோலையை வங்கி நிராகரிக்கும். ஒரு வங்கியில் காசோலை அளிக்கப்பட்டு மற்றொரு வங்கியில் இதை கிளியர் செய்து பணம் பெற வேண்டி இருந்தால், அந்த இரு வங்கிகளுக்கும் இது குறித்து தெரிவிக்கப்படும்.

ALSO READ | விவசாயிகள் மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு சூப்பர் வசதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News