Best Foods for Weight Loss in Summer: கோடை காலத்தில் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். இதற்கு முக்கிய காரணம் குறைவான பசி மற்றும் அதிக தாகம். நாள் முழுவதும் அதிகம் சாப்பிடாமல், திரவ உணவுகளை அதிகம் உண்பதால், இது சாத்தியமாகிறது. உடல் பருமனை குறைப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், எடை இழப்புக்கு உதவும் சிலவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதினால் அதிகபட்ச பலனை பெறலாம். இதற்கு கோடை சீசனில் வரும் சீசன் பழங்களை சேர்த்துக்கொள்வது நல்ல பலன் தரும். இந்தப் பழங்களில் நிறைய நீர்ச்சத்து இருப்பதால், வயிறு எளிதில் நிரம்பும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால், நீண்ட நேரம் பசியும் எடுப்பதில்லை. கோடையில் உங்கள் எடையைக் குறைக்கும் உணவில் இந்தப் பழங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
எடை இழப்புக்கு சிறந்த பழங்கள்
தர்பூசணி:
தர்பூசணி கோடையில் கிடைக்கும் பருவ கால பழம். உங்கள் உணவில் தர்பூசணியை சேர்த்துக்கொள்ள வேண்டும். தர்பூசணி உடல் பருமனை குறைப்பதில் திறம்பட செயல்படுகிறது. தர்பூசணியில் தண்ணீர் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், தர்பூசணி நீண்ட நேரம் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். நார்ச்சத்து விரைவில் வயிற்றை நிரப்புகிறது. உடலில் மிகக் குறைந்த கலோரிகளை உட்கொள்ளும். இது அதிகப்படியான உணவு சாப்பிடும் ஏக்கம் மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடும் விருப்பத்தை தடுக்கிறது.
பப்பாளி:
கோடைக்காலத்தில் பப்பாளியும் அதிகமாகக் கிடைக்கும். உங்கள் எடையைக் குறைக்கும் உணவில் பப்பாளியை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள். பப்பாளி சாப்பிடுவதால் அதிக நார்ச்சத்தும் குறைந்த கலோரியும் கிடைக்கும். பப்பாளி சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும் மற்றும் வயிற்று உப்புசம் குறையும். இது உடல் பருமனை குறைக்க உதவும். இத்தகைய சத்துக்கள் பப்பாளியில் காணப்படுகின்றன. இது எடையைக் கட்டுப்படுத்த (Health Tips) உதவுகிறது.
வெள்ளரிக்காய்:
கோடையில் ஆற்றலை கொடுக்கும் உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. கோடையில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாது. உணவுக்கு முன் 1 ப்ளேட் வெள்ளரிக்காய் சாப்பிடுவது பசியை குறைக்க உதவுகிறது. வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் வயிறு எளிதில் நிரம்பி, செரிமானம் மேம்படும். எடை குறைக்கும் உணவில் வெள்ளரியை சாலட் மிகச்சிறந்த உணவாகும். வெள்ளரிக்காய் ஜீரணிக்க நேரம் எடுக்கும், இது அதிகப்படியான உணவு உண்பதை தவிர்க்க உதவுகிறது.
முலாம்பழம்: உடல் பருமனை குறைக்க முலாம்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வது பலன் கிடைக்கும். கோடையில், முலாம்பழம் உடல் பருமனில் திறம்பட செயல்படுகிறது. முலாம்பழத்தில் குறைந்த கலோரி மற்றும் அதிக நீர்ச்சத்து உள்ளது. முலாம்பழத்தில் செரிமானத்தை மேம்படுத்தும் நார்ச்சத்து உள்ளது. நீர்ச்சத்து நிறைந்த பழங்களைச் சாப்பிட்டால், வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். இது பசியை கட்டுக்குள் வைத்திருக்கும்.
மேலும் படிக்க | சம்மரில் சுர்ருனு கோபம் வருதா... இந்த 6 விஷயங்களை செய்யுங்க் கூல் ஆகிவிடுங்க
கிவி:
புளிப்பு நிறைந்த பழமான கிவியும் கோடையில் கிடைக்கும் பழம். வைட்டமின் சி நிறைந்த கிவி, உடல் பருமனைக் குறைப்பதிலும் திறம்பட செயல்படுகிறது. கிவியில் வைட்டமின் கே, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து உள்ளது, இது எடை குறைக்க உதவுகிறது. தொடர்ந்து கிவி சாப்பிடுபவர்களுக்கு பிபி என்னும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதாகவும் உடல் எடை குறைவதாக ஒரு ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ‘இதை’ செய்யுங்கள்-வெயில் காலத்தில் வியர்வை நாற்றத்திற்கு பை-பை சொல்லுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ