அகவிலைப்படி உயர்வு, 7வது ஊதியக் குழுவின் சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரணம் உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் காத்திருப்பு முடிவுக்கு வரவுள்ளது. செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறும் மத்திய அமைச்சரவையின் உத்தேச கூட்டத்தில், ஊழியர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு அரசு அவர்களுக்கு ஒரு பெரிய பரிசை அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நவராத்திரிக்கு முன்னர் டிஏ உயர்வு
இந்த முறையும் மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி (7th Pay Commission DA Hike) நான்கு சதவீதம் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. அப்படி நடந்தால், அவர்களின் தற்போதைய அகவிலைப்படி 42ல் இருந்து 46 சதவீதமாக உயரும். இதன் காரணமாக அவர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் நல்ல உயர்வைக் காணலாம். உயர்த்தப்பட்ட டிஏ மற்றும் டிஆர் ஜூலை 1 முதல் பொருந்தும். இதன் காரணமாக அக்டோபர் மாதத்தில் ஊதிய உயர்வுடன் ஊழியர்களுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும்.
அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கும் ஊழியர்கள்
இருப்பினும், இந்த ஆண்டு அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அகவிலைப்படி உயர்வு என்ன எவ்வளவு இருக்கும் என்பது அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பிறகே தெரியவரும்.
அகவிலைப்படி 846 சதவீதத்தை தாண்டியது
ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களுக்கு தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவுகளின்படி, அகவிலைப்படி 46 சதவீதத்தை தாண்டியுள்ளது. இவ்வாறான நிலையில் இம்முறையும் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையும் டிஏ மற்றும் டிஆர் நான்கு சதவீதம் அதிகரித்தால், தொடர்ந்து மூன்றாவது முறையாக அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டதாக இருக்கும்.
ஏஐசிபிஐ இன்டெக்ஸ் டேட்டாவின் கணக்கீடு
ஜனவரி 2023 - மாத குறியீட்டு எண் - அகவிலைப்படி - 43.08 %
பிப்ரவரி 2023 - மாத குறியீட்டு எண் - அகவிலைப்படி - 43.79 %
மார்ச் 2023 - மாத குறியீட்டு எண் 133.3 - அகவிலைப்படி 133.3 - 44.46 %
ஏப்ரல் 2023 - மாத குறியீட்டு எண் - அகவிலைப்படி - 45.06 %
மே 2023 - மாத குறியீட்டு எண் - அகவிலைப்படி - 45.58 %
ஜூன் 2023 - மாத குறியீட்டு எண் - அகவிலைப்படி - 46.24 %
7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு
டிஏ உயர்வு 3 சதவிகிதம் இருக்கும் என சிலர் கூறினாலும், அதற்கு பின்னால் என்ன காரணம் இருக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இருப்பினும், இந்த முறை 3 சதவீத அகவிலைப்படி உயர்வு நிச்சயம் என்றும், 4 சதவீத உயர்வை அரசிடம் கோருவதாகவும் ரயில்வே கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சிவகோபால் மிஸ்ரா கூறியதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அவரது அறிக்கைக்குப் பிறகு, இந்த முறை அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கப்படும் என்று விவாதம் தொடங்கியது. ஆனால் தொழிலாளர் அமைச்சகத்தின் ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவுகளின்படி, 3 சதவீத உயர்வுக்குப் பின்னால் எந்த தர்க்க அடிப்படையும் இருப்பதாகத் தெரியவில்லை.
மேலும் படிக்க | LPG கேஸ் சிலிண்டர் வெறும் 450 ரூபாய்க்கு கிடைக்கிறது! விண்ணப்பிக்க தேவையான தகுதி
4 சதவீத டிஏ உயர்வுக்கான முழு வாய்ப்பு
இவ்வாறான சூழ்நிலையில், இம்முறையும் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது நடந்தால், அகவிலைப்படி 42ல் இருந்து 46 சதவீதமாக உயரும். இதன் காரணமாக, மத்திய ஊழியர்களின் சம்பளம் ஆண்டுக்கு ரூ.8,000 -இலிருந்து ரூ.27,000 ஆக உயரும்.
குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ 18,000 இல் டிஏ அதிகரிப்பு கணிதம்
ஊழியர்களின் அடிப்படை சம்பளம் - மாதம் 18,000 ரூபாய்
புதிய அகவிலைப்படி (46%) - மாதம் ரூ 8280
இதுவரையிலான அகவிலைப்படி (42%) - மாதம் ரூ. 7560
அகவிலைப்படியில் அதிகரிப்பு - 8280-7560 = ரூ. 720
ஆண்டு ஊதிய உயர்வு 720X12 = ரூ.8640
அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ 56,900 இல் டிஏ அதிகரிப்பு கணிதம்
ஊழியர்களின் அடிப்படை சம்பளம் = மாதம் ரூ 56,900
புதிய அகவிலைப்படி (46%) = மாதம் ரூ 26,174
இதுவரையிலான அகவிலைப்படி (42%) = மாதம் ரூ. 23,898
அகவிலைப்படியில் அதிகரிப்பு - 26,174-23,898 = ரூ. 2,276 மாதத்திற்கு
ஆண்டு ஊதிய உயர்வு = 2276X12= ரூ. 27,312
7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு
மத்திய அரசு ஊழியர்களின் டிஏவில் 4 சதவீதம் உயர்வு இருந்தால், அடிப்படைச் சம்பளம் ரூ.18,000 பெறும் ஊழியர்களின் அகவிலைப்படியானது மாதம் ரூ.720 ஆகவும், ஆண்டுக்கு ரூ.8,640 ஆகவும் அதிகரிக்கும். அதேசமயம், மாதம் ஒன்றுக்கு ரூ.56,900 அடிப்படைச் சம்பளமாக இருக்கும் கேபினட் செயலர் நிலை அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2276 மற்றும் ஆண்டுக்கு ரூ.27,312 பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு குட் நியூஸ் காத்திருக்கிறது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ