ஜோதிட சாஸ்திரப்படி ஏப்ரல் 12ஆம் தேதி ராகு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறியுள்ளார். இப்போது மே 23 அன்று, சுக்கிரனும் மீனத்தில் இருந்து மேஷ ராசியில் பிரவேசித்துள்ளார். ஜோதிடர்களின் கூற்றுப்படி, மேஷ ராசியில் சுக்கிரனும் ராகுவும் இணைந்தால் க்ரோத யோகம் உண்டாகும். இதனால் சண்டைகள் அதிகரிக்கும். வாக்குவாதங்கள் ஏற்பட்டு பதற்றமான சூழல் ஏற்படும்.
சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் சரியான இடத்தில் இருந்தால், அவர் செல்வம், வீடு, ஆபரணம், ஆடம்பரம் போன்றவற்றுடன் ஆடம்பரமாக வாழ்கிறார். மறுபுறம், ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமான இடத்தில் இருந்தால், அந்த நபருக்கு பொருட்செல்வத்தால் வரும் மகிழ்ச்சி குறைகிறது.
ராகுவும் சுக்கிரனும் மேஷ ராசியில் பிரவேசித்துள்ளதால், 5 ராசிக்காரர்களுக்கு கோப யோகம் உண்டாகி பிரச்சனைகள் உருவாகும். அந்த 5 ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்:
ராகு-சுக்கிரன் சேர்க்கை மேஷ ராசிக்காரர்களின் பிரச்சனைகளை அதிகரிக்கும். உங்கள் இயல்பில் கோபம் கூடும். நெருங்கிய நபர்களுடன் உங்களுக்கு ஏற்படும் வாக்குவாதங்கள் அவர்களுடனான உங்கள் உறவைக் கெடுக்கும். வாழ்க்கைத் துணையுடன் விரிசல் ஏற்பட வாய்ப்புண்டு. உங்கள் உறவுகளிலும் விரிசல் ஏற்படலாம்.
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: ஜூன் 5 முதல் சனி இந்த ராசிக்காரங்களுக்கு இன்னல்களை தருவார்
ரிஷபம்:
ராகு-சுக்கிரனின் இந்த அசுப யோகம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமையும். அதன் தாக்கம் உங்கள் உறவுகளில் காணப்படும். இதனுடன், உங்கள் நிதி நிலையும் மோசமடையலாம். நிதி பற்றாக்குறை ஏற்படக்கூடும். செலவுகள் அதிகரிக்கும். உங்களக்கு கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம்:
ராகு கேது இரு கிரகங்களும் மேஷ ராசியில் இணைவதால், சிம்ம ராசிக்கு ஐந்தாம் வீட்டில் கோப யோகம் உருவாகும். இது உங்கள் காதல் வாழ்க்கையை பாதிக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏதோ ஒரு விஷயத்தில் விரிசல் ஏற்படலாம். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள். இல்லையெனில் தேவையில்லாத பேச்சால் அதிக பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
துலாம்:
உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் கோப யோகம் உருவாகும். இது உங்கள் திருமண வாழ்க்கையை பாதிக்கும். திருமணமானவர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். உறவில் பதற்றம் ஏற்படலாம். நிதி நிலைமை மோசமாகலாம். குடும்ப உறுப்பினர்களிடையே அதிக பொறுமையுடன் நடந்துகொள்ளுங்கள்.
கும்பம்:
ராகு - சுக்கிரன் சேர்க்கை உங்கள் பதினொன்றாம் வீட்டில் கோப யோகத்தை உருவாக்கும். இந்த நேரத்தில் உங்கள் ஆசைகள் அதிகரிக்கலாம். வேலை சலிப்பை ஏற்படுத்தலாம். வாழ்க்கையில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். எனினும், கும்ப ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த காலத்தில் நடந்துகொள்ள வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுதாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR