வலி காரணமாக மருத்துவரிடம் சென்ற பெண்ணிடம் இருந்த சுமார் 3.8 செமீ அளவு கொண்ட ஒட்டுண்ணி புழுவை மருத்துவர் நீக்கியுள்ளார்!!
ஜப்பானில் தொண்டை வலி காரணமாக மருத்துவரிடம் சென்ற பெண்ணிடம் இருந்த சுமார் 3.8 செமீ அளவு கொண்ட ஒட்டுண்ணி புழுவை மருத்துவர்கள் நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 25 வயதுடைய பெண் ஒருவர் தொண்ட வலி ஏற்பட்டதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் அங்குள்ள மருத்துவமனைக்கு பரிசோதிக்க சென்றுள்ளார். இதையடுத்து டாக்டர்கள் அவரை பரிசோதித்த போது, அவரது தொண்டைக்கு உள்ளே எதோ ஒரு புழு போன்ற ஒட்டுண்ணி இருப்பதைக் கண்டரிந்துள்ளனர்.
இதையடுத்து, மருத்துவர்கள் உடனடியாக அதனை நீக்கியுள்ளனர். ஆனால், அந்த புழு சாகாமல் உயிருடனேயே தொண்டைக்குள் நெழிந்து கொண்டு இருந்துள்ளது. சுமார் 3.8 செ.மீ நீளம் கொண்ட அந்த புழுவைக் கண்டு அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த புழு எப்படி வந்தது என்று கேட்டால், அவர் 5 நாட்களுக்கு முன்னர் சஷிமி (sashimi) என்ற உணவை சாப்பிட்டுள்ளார். அதாவது, அங்கு சமைக்காமல் பச்சையாக சாஸுடன் மீன் பரிமாறப்படும்.
READ | ஆக்ஸ்போர்டின் COVID-19 தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அதனை சாப்பிட்ட 5 நாட்களுக்கு பின் அவருக்கு தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மீன் உள்ளே புழு உயிருடன் இருந்திருக்கலாம், அதை கவனிக்காமல் சாப்பிடும் போது அது அப்படியே தொண்டைக்குள்ளே சென்றிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே, தான் அசைவ உணவுகளை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஜப்பான், வட பசிபிக் நாடுகள், தென் அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இதுபோன்ற 700 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. உண்மையில், ஒட்டுண்ணி-அசுத்தமான மீன் அல்லது கடல் உணவை சாப்பிடுவதால் ஏற்படும் அனிசாகியாசிஸ் என்ற நோயும் அதிகரித்து வருகிறது.