சமூக வலைதளத்தை கலக்கும் 'பாட்டில் கேப்' எனும் புதியவகை சவாலின் வீடியோ!!
தற்போதைய இணையவாசிகல் அமைவரும் மற்றவருக்கு Challenge விடுவதையே பெரிய பொழுதுபோக்காக வைத்துள்ளனர். தங்களுக்கு பிடித்த அல்லது அபிமான விளையாட்டுகளை ஊடகங்களில் சவாலாக பதிவிட்டு அந்த வீடியோக்களை வைரலாக்கி வருகின்றனர்.
என்னக்கு தெரிந்தவரை இந்த சவால் பிட்னெஸ் சவாலில் ஆரம்பித்து Kiki சவால், ஐஸ் பக்கெட் சேலஞ்ச், Momo சவால், EatTheBean சவால், மேரி பாபின்ஸ் சவால், ஸ்னூட் சவால் என பல சவால்களை தொடர்ந்து தற்போது `பாட்டில் கேப் சேலஞ்ச்' என்ற புதியவகை சாலன்ஜ்-யை கண்டுபிடித்துள்ளனர்.
முன்னதாக டேக்வேண்டோ பயிற்சியாளர் மற்றும் வீரரான ஃபராபி டேவ்லெட்சின் (Farabi Davletchin), முதன்முதலில் இந்த சவாலில் ஈடுபட்ட ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார். அதன்பின் UFC ஃபெதர்வெயிட் சாம்பியனான மேக்ஸ் ஹோலோவே (Max Holloway) இந்த சவாலில் ஈடுபட்ட ஒரு வீடியோவை வெளியிட்டார். அதன்பின்தான், இந்த சவால் சமூக வலைதளங்களில் பிரபலமானது.
Be curious my friends! #challengeaccepted #bottlecapchallenge Passing this on to our guy @JohnMayer …. hey John if you can’t complete this challenge @erlsn and I decided you have to come to Hawaii after your tour and kick it with us until you complete it! pic.twitter.com/gLWn0dpOzV
— Max Holloway (@BlessedMMA) June 28, 2019
அந்த வீடியோ பதிவில் பிரபல பாடகரான ஜான் மேயரையும் (John Mayer) இந்த சவாலில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார். அதன்பின், ஜான் மேயர் இந்த சவாலில் ஈடுபட்டு ஒரு வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார்.
இதை தொடர்ந்து, பின் அதிரடி நாயகனான ஜேசன் ஸ்டாதமும் இந்த சவாலில் ஈடுபட்டு ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். ஜேசன் ஸ்டாதம் இந்த சவால் செய்வதை கண்டு ஈர்க்கப்பட்டு தான் இந்த சவாலில் பங்கேற்றதாக அக்சய் குமார், தனது 'பாட்டில் கேப் சேலஞ்ச்' வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வரிசையில் தற்போது.
இந்நிலையில், தொடர்ந்து பல பிரபலங்களும், பொதுமக்களும், குங்ஃபூ நிபுணர்களும் இதைச் செய்து வீடியோ வெளியிடுகின்றனர்.