ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம், RBI முக்கிய அறிவிப்பு

எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய வங்கிகள் இந்த முக்கிய வசதியை வழங்குகின்றன. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 20, 2022, 09:29 AM IST
  • ஏ.டி.எம்.-களில் யுபிஐ ஐடி மூலம் பணம் எடுக்கும் வசதி
  • இந்திய ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு
  • பணம் எடுக்கும் வசதியில் மாற்றம்
ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம், RBI முக்கிய அறிவிப்பு title=

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம்.-களிலும் யுபிஐ ஐடி மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ உள்ளிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளால் இந்த வசதி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தற்போது ஏடிஎம்கள் மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி சில வங்கிகளில் மட்டுமே உள்ளது. யு.பி.ஐ ஐடியைப் பயன்படுத்தி அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் நெட்வொர்க்குகள் முழுவதும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கார்டு இல்லாமல் ஏ.டி.எம்.-களில் யுபிஐ ஐடி மூலம் பணம் எடுக்கும் வசதி மூலம், பண பரிவர்த்தனைகளை எளிதாக்குவதுடன், அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு கார்டு இல்லாமல் எடுப்பது, என்பது கார்டு ஸ்கிம்மிங், கார்டு குளோனிங் போன்ற மோசடிகளைத் தடுக்க உதவும்.

மேலும் படிக்க | ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கு அடித்த புதிய ஜாக்பாட்!

கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியால், ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் போது, ​​வங்கி வாடிக்கையாளர் தங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த அமைப்பு தற்போது பல்வேறு வங்கிகளில் உள்ளது. 

பல்வேறு வங்கிகளின் கார்டுதாரர்கள், டெபிட் கார்டு இல்லாமலும், தங்கள் தொலைபேசி மூலம் பணத்தை எடுக்கலாம். கார்டு வைத்திருப்பவர் பெரும்பாலும் மொபைல் பேங்கிங் செயலியைப் பயன்படுத்த வேண்டும். டெபிட் கார்டுகளை வைத்திருக்கவில்லை என்றால், ஏடிஎம்களில் பணத்தை எடுக்க கோரிக்கை செய்ய வேண்டும்.

கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை சுயமாக பணம் எடுப்பதற்கு பயன்படுத்தலாம். இருப்பினும், பல வங்கிகளில் இந்த வசதி இன்னும் வரவில்லை. ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பால், அதன் அட்டைதாரர்களுக்கு இந்த சேவையை வழங்க மேலும் பல வங்கிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய வங்கிகள் இந்த வசதியை வழங்குகின்றன. இந்த வசதியைப் பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் அந்தந்த வங்கியின் செயலி அல்லது இணையதளத்தில் பதிவு செய்து, அட்டையின்றி பணம் எடுக்க முடியும். அதன்பிறகு, வாடிக்கையாளருக்கு பின் வழங்கப்படும். அதை ஏடிஎம் மேஷினில் உள்ளிட வேண்டும். அதன் பின்னரே பணம் எடுக்க முடியும். 

இந்த நிலையில் நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த முறை ஏடிஎம் மோசடிகளைத் தடுக்கும். ஏனெனில் இது பணத்தை உருவாக்க மொபைல் பின்னைப் பயன்படுத்துகிறது. கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் முறை யுபிஐ வசதியைப் பயன்படுத்துகிறது. இது உடனடிப் பணப் பரிமாற்றம் மூலம் பணம் அனுப்புபவரால் இந்த சேவை செயல்படுகிறது. இது பயனாளியின் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி பணத்தை மாற்ற அனுமதிக்கிறது.

மேலும் படிக்க | டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="350" src="https://zeenews.india.com/tamil/live-tv/embed?autoplay=1&mute=1" width="100%">

 

Trending News