பாலியல் குற்றச்சாட்டை குறித்து மவுனத்தை கலைத்த பாடலாசிரியர் வைரமுத்து

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டைக் குறித்து கருத்து தெரிவித்த தமிழ் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து.

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Oct 10, 2018, 03:27 PM IST
பாலியல் குற்றச்சாட்டை குறித்து மவுனத்தை கலைத்த பாடலாசிரியர் வைரமுத்து

இந்தியாவில் சினிமா துறையில் பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார்களை பிரபல நடிகைகள் எழுப்பி வருகின்றனர். "ME TOO" என்ற ஹேஸ்டாக்கை பயன்படுத்தி பலரும் தங்களது நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். "எனக்கு 18 வயது இருக்கும். வைரமுத்து அவர்களுடன் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அவர் மீது அதிக மரியாதை வைத்திருந்தேன். அப்பொழுது ஒரு நாள் பாடல் வரிகளை பற்றி விளக்கம் தந்துக் கொண்டிருந்தேன். திடீரென என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனே அந்த இடத்திலிருந்து ஓடி வந்துவிட்டேன், என்று அவரது அனுபவத்தை பகிர்ந்திருந்தார்". இந்த விவகாரம் குறித்து பாடகி சின்மயி, தனது டிவிட்டர் பக்கத்தில் ரீ டிவிட் செய்தார். இது பெரும் அதிர்ச்சியும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுக்குறித்து தனது மவுனத்தை கலைத்துள்ளார் பாடலாசிரியர் வைரமுத்து. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டைக் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், 

"அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்." என பதிவிட்டுள்ளார்.