மங்கோலியா நாட்டில் அணிலை சாப்பிட்டால் உடல் வலிமை கூடும் என்ற நம்பிக்கையில் அதை உண்ட தம்பதி உயிரிழந்தனர்.
மங்கோலியாவைச் சேர்ந்த தம்பதி உடல் நலனுக்காக ஒரு உணவை எடுத்துக் கொள்ளவே அது விபரீதத்தில் சென்று முடிந்தது. மங்கோலியா நாட்டில் வசிக்கும் சிலர் அணிலை சமைக்காமல் பச்சையாக உண்டால் உடல் வலிமை பெறும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள்.
சகானூர் நகரத்தில் வசிக்கும் தம்பதி கடந்த வாரம், மர்மூத் எனும் ஒரு வகை அணிலை பிடித்து சமைக்காமல் அதன் கிட்னி, வயிற்றுப்பகுதி, பித்தப்பை ஆகியவற்றை உண்டனர். இதையடுத்து அவர்களுக்கு உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்லும்போது இருவருக்கும் பிளேக் இருப்பது தெரிய வந்துள்ளது.
பின்னர் இரண்டு தினங்களில் அந்த நபர் இறந்து விட்டார். அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த மே 1 அன்று அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.