முடி உதிர்தல் முதல் பொடுகு வரை... அட்டகாசமான தீர்வை தரும் கறிவேப்பிலை சட்னி

முடி உதிர்தல், பொடுகு தொல்லை போன்ற பிரச்சனைகள் தற்போது அனைவருக்கும் இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், கறிவேப்பிலையை பயன்படுத்தினால் சர்வ கூந்தல் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 22, 2024, 06:15 PM IST
  • புரோட்டோசோல் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும்.
  • மயிர்க்கால்களை வலுப்படுத்துவதுடன் முடி உதிர்வதைத் தடுக்க உதவுகிறது.
  • வலிமையான கூந்தலை பராமரிக்க உதவும்.
முடி உதிர்தல் முதல் பொடுகு வரை... அட்டகாசமான தீர்வை தரும் கறிவேப்பிலை சட்னி title=

கறிவேப்பிலை சட்னியின் நன்மைகள்: கறிவேப்பிலை மிகவும் சிறந்த சூப்பர் உணவாகும். இது உணவின் சுவையை மேம்படுத்துவதோடு அளவில்லா ஊட்டச்சத்தையும் தர உதவுகிறது. இதுபோன்ற பல முக்கியமான பண்புகள் கொண்ட இந்த கருவேப்பிலை உடல் ஆரோக்கியம் முதல், கூந்தல் பராமரிப்பு வரை அனைத்திற்கும் பலன் தரும். பெரும்பாலான தென்னிந்திய உணவுககளில் இந்த கருவேப்பிலை கட்டாயம் சேர்க்கப்படும். அதிலும் முடி தொடர்பான பிரச்சனைக்கு கருவேப்பிலை தீர்வு தரும். தற்போது மாறிவரும் வாழ்க்கை முறை முடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சனையை ஏற்படும். குறிப்பாக பெண்களுக்கு இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதற்கான தீர்வு பேர் பலவித வழிகளை தேடுகிறனர். அத்தகைய சூழ்நிலையில், கூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை பயன்படுத்தினால், பல பிரச்சனைகளில் இருந்து விடுப்படலாம். இந்நிலையில் கூந்தலுக்கு கறிவேப்பிலை சட்னியை எப்படி தயாரித்து பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்.

கறிவேப்பிலை சட்னியில் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம், பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பண்புகள் கொண்டுள்ளது. மேலும் இவை கூந்தலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதுமட்டுமின்றி, கறிவேப்பிலையில் பல முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், இவை முடி வளர்ச்சியை மேம்படுத்தும். 

மேலும் படிக்க | அடிமுட்டாள்களும் அறிவாளியாக மாறலாம்! ‘இதை’ செய்தால் போதும்..

கூந்தலுக்கு கறிவேப்பிலை சட்னியின் நன்மைகள் (Curry leaves chutney for hair):

முடி வளர்ச்சியை மேம்படுத்தும்: கறிவேப்பிலையில் வைட்டமின் சி, பி, புரதங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவை செல்லுலார் உருவாக்கம் மற்றும் ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க உதவும். இதன் மூலம் முடி வளர்ச்சியுடன், சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். 

பளபளப்பான முடி: கறிவேப்பிலையில் உள்ள அமினோ அமிலங்கள் கூந்தலை பலபழப்பாக்க உதவும். மேலும் வலிமையான கூந்தலை பராமரிக்க உதவும். 

முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும்: கறிவேப்பிலையில் கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ், வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், மயிர்க்கால்களை வலுப்படுத்துவதுடன் முடி உதிர்வதைத் தடுக்க உதவுகிறது. 

பொடுகு: கறிவேப்பிலையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், பாக்டீரியா மற்றும் புரோட்டோசோல் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும். மேலும் இதனால் பொடுகை நீக்கலாம்.

கறிவேப்பிலை சட்னியை எப்படி தயாரிப்பது:
முதலில், ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அதில் சீரகம் சேர்க்கவும். பிறகு கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். இப்போது பொன்னிறம் வந்ததும் கறிவேப்பிலையுடன் 4 பல் பூண்டு கிராம்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இப்போது தேங்காயை போட்டு ஒன்றாக கலந்து நன்கு வதக்கியப் பிறகு கேஸை அணைக்கவும். இந்த மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் வடிவில் அரைத்துக்கொள்ளவும். உங்கள் சட்னி தயார்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வயதான தோற்றத்தை தாமதப்படுத்த இந்த 5 ஆயுர்வேத வைத்தியங்கள் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News