புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு கலை. இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.
இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே..
இன்றைய நாளுக்கான உங்கள் ராசிபலன் எப்படி உள்ளது? உங்கள் அதிர்ஷ்ட எண், நிறம் என்ன? இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Also Read | தமிழ் பஞ்சாங்கம் 23 மே, 2021: வைகாசி 9ஆம் நாள்; ஞாயிற்றுக்கிழமை
ராசிபலன் 23-05-2021
மேஷம்:
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நல்லது. உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பகையை தவிர்க்க இயலும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரிஷபம்:
புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் அகலும். எழுத்து பணிகளில் இருப்பவர்களுக்கு புதுமையான சிந்தனைகள் தோன்றும்.
மிதுனம்:
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வாகனங்களின் மூலம் லாபம் மேம்படும். தாய்வழி உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். நறுமணப் பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.
கடகம்:
மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். உங்களின் மீதான சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்.
Also Read | மதிய உணவில் சாப்பிட ஏற்றது எது? தவிர்க்க வேண்டியவை எவை?
சிம்மம்:
கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபகமறதி ஏற்பட்டு நீங்கும். கூட்டாளிகளின் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஆடம்பரப் பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி:
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்கள் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும்.
துலாம்:
எதிர்பாராத பயணங்களின் மூலம் உடல் சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். கால்நடைகள் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி அதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள்.
விருச்சகம்:
குடும்ப பெரியவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் ஈடேறும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்பட்டால் நன்மை ஏற்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகளும், விருப்பங்களும் உண்டாகும். எதிர்பாலின மக்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.
Also Read | Benefits of Ragi: பாலை விட 3 மடங்கு கால்சியம் எதில் இருக்கிறது தெரியுமா?
தனுசு:
மறைத்து வைக்கப்பட்ட சில பொருட்கள் கிடைக்கும். ஆடை மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி கொண்டிருந்த வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த அபிவிருத்திக்கான எண்ணங்கள் அதிகரிக்கும்.
மகரம்:
புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான எண்ணங்கள் மேம்படும். நண்பர்களுடன் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். தந்தை வழியில் வரவேண்டிய தனவரவுகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு பயணங்களை மேற்கொண்டு மனம் மகிழ்வீர்கள். பணப்புழக்கங்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும்.
கும்பம்:
கடன் தொடர்பான பிரச்சனைகளை நிதானமாக கையாளவும். மற்றவர்களிடம் கோபங்களை விடுத்து பொறுமையுடன் செயல்பட வேண்டும். எண்ணிய காரியங்களை செய்து முடிப்பதில் சோம்பலும், காலதாமதமும் ஏற்படும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். பங்கு வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் சற்று பொறுமையுடன் முடிவு செய்வது நன்மையை ஏற்படுத்தும்.
மீனம்:
மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன்களை அளிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். நிர்வாகத்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும்
Also Read | உடலை பொன்னிறமாக்கும் பொன்னாங்கண்ணி கண்களுக்கு ஒளியூட்டும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR