அன்புள்ள வாழ்க்கையே: மன அழுத்தத்துக்கு தற்கொலை தீர்வு ஆகாது!

டியர் வாழ்க்கை / அன்புள்ள வாழ்க்கை: பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக சிலர் வாழ்க்கையே முடித்து கொள்கிறார்கள். இதற்கு கரணம் மன அழுத்தமா? நொடி நேர தடுமாற்றமா? எல்லா பிரச்சினைகளுக்கும் தற்கொலை என்றுமே தீர்வாகாது!

Last Updated : Jun 13, 2018, 03:19 PM IST
அன்புள்ள வாழ்க்கையே: மன அழுத்தத்துக்கு தற்கொலை தீர்வு ஆகாது! title=

(செய்தி: ஜீ நியூஸ் டிஜிட்டல் ஆசிரியர் - தயாசங்கர் மிஸ்ரா )


சர்ச்சைக்குரியசாமியார் மற்றும் ஆன்மீக தலைவர் பய்யூஜி மகாராஜ். சாமியார் மகாராஜ் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் மிகவும் பிரபலமானவர். போபாலில் எனக்கும் அவர்களுடன் ஒரு சந்திப்பு இருந்தது. அவர் எங்கள் செய்தித்தாளின் எம்.டி.யின் விருந்தினராக  இருந்தார். முன்பு அவர் ஒரு பேஷன் டிசைனர், மாடல் என்று நம்பப்படுகிறது. பல அரசியல் தலைவர்களுக்கு ஆன்மீக ஆலோசனை வழங்கியவர் பய்யூஜி மகாராஜ். 

பய்யூஜி மகாராஜ்  உண்மையான பெயர் உதய் சிங் தேஷ்முக். தேவேந்திர பத்னாவிஸ் உட்பட உயர் அரசியல் தலைவர்கள், புகழ்பெற்ற பாடகர் லதா மங்கேஷ்கர் மற்றும் அவரது சீடர்கள் ஆவார்கள். அன்னா ஹசாரே தலைமையிலான இந்தியாவின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் அதன் உச்சத்தில் இருந்தபோது, அவர் மத்தியஸ்தராக இருந்தார். இவரது அவரது ஆசிரமம் இந்தூர் நகரத்தில் அமைந்துள்ளது. பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2016ம் ஆண்டு மகாராஜ் அறிவித்தார். இது அவரது ஆதரவாளர் பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.

இப்படி பட்ட ஒருவர் தனது வாழ்க்கையை முடித்திக்கொள்ளும் சம்பவம் வருந்துகிற விஷயம். ஆம் இவர் நேற்று பிற்பகல்  துப்பாக்கியால் தன் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட அவரை உடனடியாக இந்தூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். சாமியார் மகாராஜின் இறப்பு செய்தியை கேட்டு அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். 

 தற்கொலைக்கு முன்பாக சாமியார் மாகாராஜ் எழுதிய கடிதத்தில், என்னுடைய குடும்பத்தினை யாராது சிலர் கவனித்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான மன அழுத்தத்தால் நான் உங்களை விட்டு போகிறேன். நான் விரக்தியடைந்து விட்டேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

தற்போதைய காலகட்டத்தில் மன அழுத்தம், எதிர்பார்ப்பு ஆகியவை இந்தியாவில் மிக அதிக அளவில் காணப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. உலகளாவிய அளவில் 20 பேருக்கு ஒருவர் ஏதாவது ஒரு விதத்தில் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார். இது ஏதோ புதிய பிரச்னை என்று நினைப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகத்தான் இருக்கும்.

இந்தப் பிரச்னையை புரிதலுடன் ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம்தான் மன அழுத்தம் தொடர்பான வெளிப்பாடுகளை புரிந்துகொள்ள இயலாமல் போகிறது.

பல உடல் நல பாதிப்புக்கு, மன அழுத்தமே முக்கிய காரணம். அதோடு பணியிடத்தில் நெருக்கடி, குடும்ப பிரச்னை போன்ற காரணங்களாலும் மன அழுத்தம் வரலாம். இதற்கு மற்றவர்களுடன் கலந்து பேசினால், மன அழுத்தம் குறையும். தற்கொலை எண்ணம் வராமல் இருக்க மற்றவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள்.

ஒருவர் வழக்கமான நடவடிக்கைகளில் இருந்து மாறுபட்டு தனிமையில் இருக்கிறார் என்றால், அவரது மனநலத்தில் சிக்கல் உள்ளது என, உணர வேண்டும். குடும்பத்தினர், நண்பர்கள் அவர்களிடம் மனம் விட்டு பேசி, பிரச்னைகளை அறிந்து, தீர்வுக்கு முயற்சிப்பது நல்லது.

தற்கொலை எண்ணத்திற்கு ஆலோசனை தர இந்தியாவில் பல்வேறு இலவச உதவி மையங்கள் உள்ளது. தமிழக அரசு, ‘104’ தொலைபேசி வழி மருத்துவ சேவைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இங்கு தொடர்பு கொண்டால், மன அழுத்தம் தீர, தற்கொலை எண்ணம் மாற ஆலோசனைகள் கிடைக்கும். 

முறையான உணவு, மன இறுக்கத்தை போக்கும். உடற் பயிற்சி, மனப் பயிற்சி, யோகாசனம் போன்ற பயற்சி முறைகள் வாழ்க்கையை வளமாக்கும்.

(https://twitter.com/dayashankarmi)

உங்கள் கேள்விகளை மற்றும் பரிந்துரைகளை இன்பாக்ஸில் பகிரவும்: https://www.facebook.com/dayashankar.mishra.54

பிற மொழிகளில் படிக்க கீழ் உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்!

Hindi- ல் படிக்க:- डियर जिंदगी : भय्यूजी महाराज के सुसाइड नोट के मायने...

Marathi-ல் படிக்க:- डिअर जिंदगी : भय्यूजी महाराज यांच्या सुसाईड नोटचा अर्थ

Gujarati-ல் படிக்க:- ડિયર જિંદગી: ભય્યુજી મહારાજની સ્યૂસાઈડ નોટનો અર્થ...

Malayalam- ல் படிக்க:- ഡിയര്‍ സിന്ദഗി: ആള്‍ദൈവം ഭയ്യൂജി മഹാരാജിന്‍റെ ആത്മഹത്യാക്കുറിപ്പ് അടിസ്ഥാനമാക്കി...

Telugu- ல் படிக்க:- డియర్ జిందగీ: బతికి ఉంటే ఎందరినో బతికించవచ్చు భయ్యూ మహారాజ్

Kannada- ல் படிக்க:- ಡಿಯರ್ ಜಿಂದಗಿ: ಭಯ್ಯೂಜಿ ಮಹಾರಾಜರ ಆತ್ಮಹತ್ಯೆ ಟಿಪ್ಪಣಿ ಹಿನ್ನಲೆಯಲ್ಲಿ...

Dear Zindagi முழு தொகுப்பு இங்கே!- Dear Zindagi

Trending News