மின்னல் வேகத்தில் முடிந்த தீபாவளி ரயில் டிக்கெட்டுகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து ரயில் டிக்கெட்டுகளும் விற்றுமுடிந்துவிட்டதாக அதிகாரிகள் தகவல்.

Last Updated : Jul 5, 2018, 10:07 AM IST
மின்னல் வேகத்தில் முடிந்த தீபாவளி ரயில் டிக்கெட்டுகள்! title=

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து ரயில் டிக்கெட்டுகளும் விற்றுமுடிந்துவிட்டதாக அதிகாரிகள் தகவல்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் முன்பதிவு தொடங்கியது. 

தொழில் காரணமாகவும், வேலை காரணமாகவும் மற்றும் கல்விக்காகவும் பலர் தான் சொந்த ஊரை விட்டு சென்னையில் வந்து தங்கி வாழ்கின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் என பண்டிகை காலங்கள் வரும் போது தொடர்ந்து விடுமுறை கிடைகிறது. அப்பொழுது தங்கள் சொந்த ஊருக்கு சென்று, தனது குடும்பத்தாருடன் பண்டிகை கொண்டாடுவது வழக்கம். 

இதனால் பண்டிகை காலங்களில் பேருந்து, ரயில் நிலையங்கள் என கூட்டம் அலைமோதும். டிக்கெட் கிடைப்பதும் பெரும் சிரமம். இதனால் பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்கின்றனர். 

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்லுபவர்கள் இரெயில்களில் இன்று முதல் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் டிக்கெட் முன்பதிவு செய்ய தெற்கு ரயில்வே சார்பில் 250க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் நவம்பர் 2-ம் தேதி பயணம் செய்வோருக்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.

இன்று தொடங்கும் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் அதிகாலை முதலே ஏராளமான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருந்தனர். 
இந்த ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து ரயில் டிக்கெட்டுகளும் விற்றுமுடிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Trending News