கர்ப்பகாலத்தில் மாதம் தோறும் வணங்க வேண்டிய தெய்வங்கள்

கருவுற்றிருக்கும் பெண்கள் கர்ப்பகாலத்தில் மாதம் தோறும் வணங்க வேண்டிய தெய்வங்கள் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர். சில புராண நூல்களிலும் இதற்கான குறிப்புகள் காணப்படுகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 4, 2021, 09:20 PM IST
  • கர்ப்பகாலத்தில் மாதம் தோறும் வணங்க வேண்டிய தெய்வங்கள்
  • தலைப்பிரசவமாக இருந்தால் எட்டாம் மாதத்தில் சுக்கிரனை வணங்க வேண்டும்
  • குழந்தை அறிவும், ஆயுளும், நல்லொழுக்கமும் கொண்ட வாரிசாக உருவாகும்
கர்ப்பகாலத்தில் மாதம் தோறும் வணங்க வேண்டிய தெய்வங்கள்  title=

கருவுற்றிருக்கும் பெண்கள் கர்ப்பகாலத்தில் மாதம் தோறும் வணங்க வேண்டிய தெய்வங்கள் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர். சில புராண நூல்களிலும் இதற்கான குறிப்புகள் காணப்படுகிறது.  

ஒரு பெண் தான் கர்ப்பம் அடைந்தது முதல் பிரசவகாலம் வரை மாதந்தோறும் ஒவ்வொரு குறிப்பிட்ட மாதத்திற்கு உரிய கிரகங்களையும் அதற்குரிய அதிதெய்வங்களை வழிபட்டு வந்தால் பிரசவம் நல்லபடியாக நடக்கும். 

கருவுற்ற பெண்ணின் இந்த வேண்டுதலால் பிறக்கும் குழந்தை அறிவும், ஆயுளும், நல்லொழுக்கமும் கொண்ட வாரிசாக உருவாகும். ஒரு பெண்ணிற்கு அது தலைப்பிரசவமாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இந்த தெய்வங்களை கூறும் முறைப்படி வணங்கினால் நன்மையே நடக்கும்.  

Also Read | கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற சாரங்கபாணி கோவிலின் தொன்மை

தலைப்பிரசவமாக இருந்தால் எட்டாம் மாதத்தில் சுக்கிரனையும், சுக்கிரனின் அதிதேவதையான ஸ்ரீலக்ஷ்மியையும் வணங்க வேண்டும்.  இரண்டாம் குழந்தை கருவுற்றிருக்கும் போது சுகப் பிரசவத்திற்கு சுக்கிரன் மற்றும் கர்பிணிப் பெண்ணுக்கு உரிய ஜன்ம லக்னாதிபதியை வழிபடவேண்டும்.

கருவுற்ற மூன்றாம் மாதத்தில் பிரம்மா, காயத்ரி, விஸ்வகர்மா மற்றும் தக்ஷ்ணாமூர்த்தியை வணங்கவேண்டும்.  கர்ப்பிணிகள் கருவுற்ற ஆறாம் மாதத்தில் சிவனை வழிபடவேண்டும்.

கர்ப்பிணி அல்லது அவரது கணவரின் ஜென்ம நட்சத்திரத்திம் உள்ள நாளில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். 

Also Read | சவப்பெட்டியில் உயிருடன் புதைக்கப்பட்டு 50 மணி நேரம் இருந்த வீடியோவுக்கு 50 மில்லியன் views

வளைகாப்பு, சீமந்தம் செய்யும்ப்போதோ அல்லது கருவுற்ற ஏழாவது மாதத்தில், வறுமையில் வாடும் தாய்மார்களின் ஏழை பச்சிளம் குழந்தைக்கும் மற்றும் ஏழை மக்களுக்கு திருமண உதவிகள் செய்வது கடவுள்களின் மனதைக் குளிரச் செய்யும்.  

குலதெய்வ வழிபாடு எப்போதுமே அவசியம் என்றாலும், குறிப்பாக கர்ப்பகாலத்தில் மிகவும் முக்கியமானதாகும், குல தெய்வம், தங்கள் குலக் கொழுந்தை நல்ல முறையில் பிரசவிக்க அருள் புரிவார்.

முதல் மாதம் சுக்கிரன், இரண்டாம் மாதம் செவ்வாய், மூன்றாம் மாதம் குரு, நான்காம் மாதம் சூரியன், ஐந்தாம் மாதம் சந்திரன், ஆறாம் மாதம் சனி, ஏழாம் மாதம் புதன், எட்டாம் மாதம் சுக்கிரன், ஒன்பதாம் மாதம் சந்திரன், பத்தாம் மாதம் சூரியன் என கர்ப்பிணிப் பெண்கள் நவ கிரகங்களையும் அதன் அதிதெய்வங்களையும் வழிபட்டால் கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். சுகப்பிரசவமும் நடைபெறும்.

Also Read | சரித்திரத்தில் April 04ஆம் தேதி முக்கிய சம்பவங்கள் சொல்லும் செய்திகள் என்ன?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News