இந்தியாவில் அறிமுகமானது Ducati Scrambler 1100!

பிரபல மோட்டார் பைக் நிறுவனமான Ducati தனது புதுவரவான Scrambler 1100-னை இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 27, 2018, 03:30 PM IST
இந்தியாவில் அறிமுகமானது Ducati Scrambler 1100! title=

பிரபல மோட்டார் பைக் நிறுவனமான Ducati தனது புதுவரவான Scrambler 1100-னை இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது!

இந்தியாவில் அறிமுகமாகியுள்ள Ducati Scrambler 1100 மோட்டார் வாகனத்தில் விலை ₹10.91 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வகைகளில் வெளியாகியுள்ள இந்த வாகனத்தின் விலை முறையே ₹10.91 லட்சம், ₹11.12 லட்சம் மற்றும் ₹11.42 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு EICMA நிகழ்ச்சியில் இந்த Ducati Scrambler 1100 ஆனது உலகளாவிய மோட்டார் சைக்கில் கண்காட்சியில் முதன்முறையாக அறிமுகம் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் இந்த வாகனம் அறிமுகமாகியுள்ளது.

Ducati 1100 Standard ஆனது ‘62 Yellow’ மற்றும் ‘Shining Black’ வண்ணத்திலும், Ducati Scrambler Special ஆனது ‘Custom Grey’ வண்ணத்திலும், Scrambler Sport ஆனது ‘Viper Black’ வண்ணத்திலும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது.

இந்த மூன்று வகை Scrambler வாகனமும் 1,079cc திறன் கொண்டவை. மேலும் 85 bhp, 6 speed கியர் பாக்ஸ் சிறப்பம்சத்தையும் கொண்டுள்ளது.

Ducati Scrambler 1100 பற்றி சில குறிப்புகள்...

  • என்ஜின் அமைப்பு................Single cyl, air-cooled
  • டிஸ்ப்ளேஸ்மென்ட்..............1079 cc
  • Max Power......................................85.65 PS @ 7500 rpmm
  • Max Torque.....................................88 Nm @ 4750 rpm
  • கியர்பாக்ஸ் ............................6-speed 
  • எடை............................................206 kg
  • Fuel Capacity (Litres).....................15 L
  • Ground Clearance..........................71 mm
  • Starting Price (Ex-Delhi).................₹ 10,91,000

Trending News