PF Account வைத்திருப்பவர்களுக்கு New Year Gift: அதிகமாகப் போகிறது உங்கள் account balance

செப்டம்பரில், தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்வார் தலைமையிலான அறங்காவலர்கள் கூட்டத்தில், 8.15 சதவிகிதம் மற்றும் 0.35 சதவிகிதம் என இரண்டு தவணைகளில் வட்டியை அளிக்க EPFO ​​முடிவு செய்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2020, 11:53 AM IST
  • EPF வட்டித் தொகை ஒரே தவணையாக அளிக்கப்படும்.
  • முன்னர், வட்டித் தொகை இரண்டு தவணைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
  • இது டிசம்பர் இறுதிக்குள் அனைவரது கணக்குகளிலும் வரவு வைக்கப்படும்.
PF Account வைத்திருப்பவர்களுக்கு New Year Gift: அதிகமாகப் போகிறது உங்கள் account balance title=

பணியில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கின் இருப்பு புதிய ஆண்டில் அதிகரிக்கும். ஏனெனில், பி.எஃப் கணக்கின் வட்டித் தொகை டிசம்பர் இறுதிக்குள் அனைவரது கணக்குகளிலும் வரவு வைக்கப்படும். இதில் தனிச்சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால், வட்டித் தொகையின் முழு பணமும் ஒன்றாக கணக்கில் சேர்க்கப்படும்.

முன்னதாக, வட்டித் தொகை இரண்டு தவணைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது அது ஒரே தவணையில் கணக்குகளில் சேர்க்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

EPF கணக்கு வைத்திருப்பவர்கள் பயனடைவார்கள்

பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), டிசம்பர் இறுதிக்குள் 2019-20 நிதியாண்டிற்கான சுமார் ஆறு கோடி பங்குதாரர்களின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF Account) கணக்குகளில் மொத்தமாக 8.5 சதவீத வட்டியை டெபாசிட் செய்யும்.

முன்னதாக செப்டம்பரில், தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்வார் தலைமையிலான அறங்காவலர்கள் கூட்டத்தில், 8.15 சதவிகிதம் மற்றும் 0.35 சதவிகிதம் என இரண்டு தவணைகளில் வட்டியை அளிக்க EPFO ​​முடிவு செய்தது.

தொழிலாளர் அமைச்சகம் (Labour Ministry) 2019-20 ஆம் நிதி ஆண்டில், EPF-ல் ஒரு நேரத்தில் 8.5 சதவீத வட்டியை வழங்க நிதி அமைச்சகத்திற்கு ஒரு கோரிக்கையை அனுப்பியுள்ளது. இந்த கோரிக்கை இந்த மாதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைக்கு இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கிடைத்துவிட்டால், EPF-ல் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் இந்த மாதமே வட்டி சேர்க்கப்படும்.

ALSO READ: ஜனவரி 1 முதல் காசோலை பணபரிவர்தனை முறையில் மாற்றம் - இதோ முழு விவரம்!

CBT கூட்டத்தில் முடிவு

தொழிலாளர் அமைச்சர் கங்வார் தலைமையிலான EPFO-வின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) கூட்டம் மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டது. இதில் 2019-20 ஆம் நிதி ஆண்டிற்கான EPF-க்கான 8.5 சதவீத வட்டி விகிதம் அங்கீகரிக்கப்பட்டது.

மார்ச் மாதம் நடந்த சிபிடி கூட்டத்தில், 8.5 சதவீத வட்டியை வழங்கும் முடிவை நிறைவேற்ற ஒப்புக்கொள்ளப்பட்டது. எனினும், இந்த 8.5 சதவீத வட்டி கணக்கு வைத்திருப்பபர்களின் அகௌண்டுகளில் 8.15 சதவீதம் மற்றும் 0.35 சதவீதமாக இரண்டு தவணைகளில் டெபாசிட் செய்யப்படும் என்று சிபிடி முடிவு செய்திருந்தது. இது இப்போது மாற்றப்பட்டு ஒரே தவணையாக 8.5 சதவிகித வட்டி கணக்கில் சேர்க்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ALSO READ: உங்கள் வங்கி கணக்கில் ரூ.5 லட்சத்திற்கு மேல் ஏன் வைக்கக்கூடாது?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News