பெண்மணி ஒருவர் எத்தியாட் விமானத்தில் பயணித்த போது நடுவானில் அவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவை சேர்ந்த பெண்மணி ஒருவர் அபுதாபியில் இருந்து ஜகார்த்தாவுக்கு செல்லும் எத்தியாட் விமானத்தில் EY474 நேற்று (புதன்கிழமை) காலை பயணித்துள்ளார். இந்த விமானம் அரேபியக் கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது, இந்தோனேசியாவைச் சேர்ந்த பெண்ணுக்கு திடீர் என பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சற்று நேரத்தில் அந்த பெண்ணுக்கு விமானத்திலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், அந்த விமானம் மும்பையில் நேற்று பிற்பகலில் தரையிறக்கப்பட்டது. அங்கு காத்திருந்த மருத்துவர்கள் குழு உதவியோடு, ஆம்புலன்ஸ் மூலம் தாயும், குழந்தையும் செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதன் காரணமாக விமானம் ஜகார்த்தா செல்வது 2 மணி நேரம் தாமதமானது. பயணிகளின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என்பதால், தடங்கலுக்கு வருந்துவதாக எத்தியாட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
Etihad Airways Abu Dhabi-Jakarta flight diverted to Mumbai as a woman passenger gives birth onboard the flight. pic.twitter.com/zosDBe60Z2
— ANI (@ANI) October 24, 2018