வறண்ட கூந்தலை பளபளப்பாக்கணுமா… இந்த ஹேர் சீரம் பயன்படுத்துங்கள்

Homemade Rice And fenugreek Serum : தீராத முடி உதிர்வால் நீங்களும் சிரமம் படுகிறீர்கள் என்றால், வெந்தய விதை, அரிசி, கறிவேப்பிலை மற்றும் கற்றாழை ஜெல் ஒன்றாக கலந்து ஹேர் சீரம் பயன்படுத்தலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 25, 2024, 03:25 PM IST
  • முடி உதிர்வுக்கு அரிசி மற்றும் வெந்தய விதை சீரம்
  • வெந்தய விதையில் புரதம் மற்றும் நிகோடினிக் அமிலம் நிறைந்துள்ளது.
  • கற்றாழை ஜெல் கூந்தலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.
வறண்ட கூந்தலை பளபளப்பாக்கணுமா… இந்த ஹேர் சீரம் பயன்படுத்துங்கள் title=

ஹோம்மேட் அரிசி மற்றும் வெந்தய சீரம் : நம்மை சுற்றியுள்ள காற்று மாசுபாடு காரணமாகவோ வெயிலின் தாக்கம் காரணமாகவோ நம் முடியில் பொடுகு, முடி வெடிப்பு போன்ற பல பிரச்சனைகள் வருகின்றது. அதுமட்டுமின்றி மோசமான உணவு முறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாகும். இதனுடன் ரசாயன கூந்தல் பராமரிப்பு சாதனங்களையும் பயன்படுத்துவதாலும் கூந்தலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனாலே இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்தல், உடைதல் போன்ற பிரச்சனைகள் மக்களிடையே அதிவேகமாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனைகளை தவிர்த்து ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமென்றால், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும், அதனுடன் இயற்க்கை வைத்தியங்களை பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் முடி உதிர்தல் பிரச்சனைக்கு எந்த வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தினால் தீர்வு கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.

முடி உதிர்வுக்கு அரிசி மற்றும் வெந்தய விதை சீரம் - How To Make Fenugreek Seeds And Rice Serum For Hair Fall :

தேவையான பொருட்கள்:
வெந்தய விதைகள் - 2 டீஸ்பூன்
அரிசி - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
கற்றாழை ஜெல் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

சீரம் தயாரிக்கும் முறை:
* முதலில் அரிசி மற்றும் வெந்தய விதையத்தை இரவு முழுவதும் ஒரு கப்பில் தண்ணீரில் ஊற்றி ஊற வைக்கவும்.
* பின்னர் காலையில் இந்த ஊறவைத்த வெந்தய விலை மற்றும் அரிசியை ஒரு கடாயில் போட்டு சூடாக்கவும்.
* இப்போது அந்த கடாயில் கறிவேப்பிலை, கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
* தயாரிக்கப்பட்ட இந்த கலவையை வடிகட்டி காற்றுப்புகாத பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
* இந்த சீரம் உச்சந்தலை முதல் நுனி முடி வரை தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரி மற்றும் ஷாம்பு கொண்டு நன்கு கழுவவும்.

மேலும் படிக்க | ஓமவல்லிக்குள் இருக்கும் நல்ல குணங்கள் என்ன? பல நோய்களுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி!

அரிசி மற்றும் வெந்தய விதை சீரத்தின் நன்மைகள் - Benefits Of Rice And Methi Seeds Serum For Hair Fall :

வெந்தய விதை: வெந்தய விதையில் புரதம் மற்றும் நிகோடினிக் அமிலம் நிறைந்துள்ளதால், இவை கூந்தலை வலுவாக்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும், போடுகை நீக்கவும் உதவும்.

அரிசி: அரிசி தண்ணீர் கூந்தலில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், கூந்தல் மேம்படுவதுடன், வலுவாக்கவும் உதவும், அதுமட்டுமின்றி இது முடி உடைதல் பிரச்சனைக்கும் முற்றிப்புள்ளி வைக்க உதவும்.

கறிவேப்பிலை: கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற உயர் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது உச்சந்தலைக்கு ஊட்டமளிக்க உதவுகிறது, முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவும்.

கற்றாழை: கற்றாழை ஜெல் கூந்தலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும், மேலும் உச்சந்தலையில் இருக்கும் பொடுகை போக்கவும் உதவும், அதுமட்டுமின்றி ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஒல்லி பெல்லி வேணுமா? எடை குறையணுமா? வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க போதும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News