பிளிப்கார்டில் ஆர்டர் செய்தால் 45 நிமிடத்தில் டெலிவரி!

பிளிப்கார் நிறுவனம் தனது வியாபாரத்தை அதிகரிக்க 45 நிமிடத்தில் மளிகைப் பொருட்களை விநியோகம் செய்ய உள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 19, 2022, 12:53 PM IST
  • 'பிளிப்கார் குயிக்' 45 நிமிடத்தில் மளிகைப் பொருட்களை விநியோகிக்கும் சேவையை திட்டமிட்டுள்ளது.
  • ஸ்விக்கிஇன் இன்ஸ்டாமார்ட் மற்றும் செப்டோ 15-20 நிமிடங்களில் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்கின்றன.
பிளிப்கார்டில் ஆர்டர் செய்தால் 45 நிமிடத்தில் டெலிவரி! title=

பிளிப்கார் பெங்களூரின் சில பகுதிகளில் மளிகைப் பொருட்களை 45 நிமிடங்களில் டெலிவரி செய்யத் தொடங்கியுள்ளது, டெலிவரி சேவை நேரத்தை 90 நிமிடங்களில் இருந்து தற்போது பாதியாகக் குறைத்துள்ளது. நாட்டின் முன்னணி மின்வணிக தளமான பிளிப்கார், 'பிளிப்கார் குயிக்' எனப்படும் 45 நிமிடத்தில் மளிகைப் பொருட்களை விநியோகிக்கும் சேவையை அடுத்த மாதம் முதல் மேலும் பல நகரங்களுக்கு எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க | அமேசான் அட்டகாச சலுகை: சாம்சங் போனில் ரூ.50,000 தள்ளுபடி, மிஸ் செஞ்சிடாதீங்க

வர்த்தக நிறுவனங்களான பிளின்கிட், செப்டோ, ஸ்விக்கி-ன் இன்ஸ்டாமார்ட் மற்றும் டான்ஸோ ஆகியவை 15-20 நிமிடங்களுக்குள் பலவகையான பொருட்களை வழங்கி வரும் நிலையில் பிளிப்கார்டும் தற்போது நுழைந்துள்ளது.  பிளிப்கார் நிறுவனம் 10-20 நிமிட டெலிவரி, சரியான நீண்ட கால வாடிக்கையாளர் மாடல் அல்ல என்றும் அது தங்கள் நிறுவனத்தின் சிந்தனைக்கு ஏற்றது அல்ல என்றும் கூறுகிறது. நல்ல மதிப்பு மற்றும் தேர்வுடன் 30-45 நிமிடங்களில் டெலிவரி செய்யும் மிகவும் நிலையான வணிகத்தை நாங்கள் பார்க்கிறோம். அவசரமாக டெலிவரி செய்து அதில் தவறுகள் நடப்பதை விட நிதானமாக மற்றும் நிலையான சேவையை கொடுக்க கருதுகிறோம்.   

flipkart

ஸ்விக்கிஇன் இன்ஸ்டாமார்ட் மற்றும் செப்டோ போன்ற விரைவு வர்த்தக நிறுவனங்கள் 15-20 நிமிடங்களில் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்வதற்கு வசதியாக சில குறிப்பிட்ட கடைகளை வைத்துள்ளது. இந்த கடைகளில் பொதுவாக 1000-3000 பொருட்கள் சேமித்து வைத்து கொள்கின்றன. இதில் சில பொருட்களின் தரம் கேள்விக்குறி தான்.  பிளிப்கார் நிறுவனம் தரமான பொருட்களை கொடுக்க கூடுதல் காலம் எடுத்து கொள்கிறது என்று கூறுகிறது. 90 நிமிட டெலிவரி சேவையாக தொடங்கப்பட்ட பிளிப்கார் குயிக், தற்போது 14 நகரங்களில் உள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டுக்குள் 200 நகரங்களுக்கு மேல் கொண்டு செல்ல நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிளிப்கார் அதன் புதிய காய்கறிகள் மற்றும் பழங்கள் வணிகத்தை மளிகை வகையின் கீழ் கொண்டு வரவுள்ளது.  இந்த சேவை தற்போது பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் உள்ளது.

Flipkart Quick - Flipkart Launches 90-Minutes Delivery Service

விரைவான வர்த்தகத்தை ஏற்றுக்கொள்வதில் இந்தியா மற்ற உலக சந்தைகளில் முன்னணியில் உள்ளது. ஆன்லைன் மளிகைப் பொருட்களை வாங்குவதில் இந்தியா 13% உள்ளது.  மற்ற நாடுகளான சீனா 7% ஆகவும், ஐரோப்பா 3% ஆகவும் உள்ளது. விரைவு வர்த்தகமானது பெரிய பெருநகரங்களில் உள்ள நடுத்தர/உயர் வருமானம் கொண்ட குடும்பங்களை குறிவைக்கிறது. கடந்த ஆண்டு பிளின்கிட்-ல் $100 மில்லியனை முதலீடு செய்த Zomato, விரைவு-வணிகப் பிரிவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 400 மில்லியன் டாலர்களை கூடுதலாக முதலீடு செய்வதாக அறிவித்தது. இதற்கிடையில், ஸ்விக்கி தனது இன்ஸ்டாமார்ட் சலுகையை வளர்க்க $700 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

மேலும் படிக்க | இனி வாட்ஸ்அப்பில் சாட் செய்யாமலேயே வாய்ஸ் மெசேஜை கேக்கலாம்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News