முன்னாள் பாலியல் நடிகை தனது முன்னாள் காதலரை கொலை செய்ய குண்டர்களை அனுகியதற்காக 10 ஆண்டு தண்டனை பெற்றுள்ளார்.
32 வயதான அவர், $2,500 அமெரிக்க டாலர்களை கொலையாளிக்கு ஊதியமாக செலுத்தியதாக தெரிகிறது. தொலைக்காட்சி நிலையமான KHQ படி, அந்த பெண் கைது செய்யப்பட்டபோது அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.
தனது குழந்தைகளில் ஒருவரின் தந்தையை கொல்ல ஒரு கொலையாளியை பணியமர்த்தியதற்காக முன்னாள் ஆபாச நட்சத்திரத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லின் பேஷன் மற்றும் லின் ப்ளெசண்ட் என்ற பெயர்களில் பிரபலமான ஆபாச நடிகை கத்ரீனா டான்போர்த்-க்கு இந்த தண்டனை ஐடஹோ நீதிமன்றத்தில் பிப்ரவரி 25 அன்று அளிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, ஒரு அறிமுக நபருடன் ஒரு குண்டரை வேலைக்கு அமர்த்துவது பற்றி விவாதித்துள்ளார். மேலும் தனது முன்னாள் காதலன் மற்றும் அவரது குழந்தைகளில் ஒருவரின் தந்தையை கொல்லும்படி கேட்டார், அதற்கு 5,000 அமெரிக்க டாலர் அளிப்பதாகவும் விலை பேசியுள்ளர். ஆனால் அந்த குண்டர் வேடத்தில் இருந்த கொலையாளி ஒரு இரகசிய பொலிஸ் அதிகாரி என்பது அவருக்கு தெரியவில்லை.
புலனாய்வாளர்கள் கூறுகையில், டான்போர்த் ஒரு கடினமான குழந்தைப் பருவத்தைக் கொண்டிருந்ததாகவும், அவர் இளம் பருவத்திலேயே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மேலும் இதன் காரணமாக 32 வயதான முன்னாள் ஆபாச நடிகை நீதிபதியிடம் ஏழு ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை கேட்டார், எனினும் அவரது குற்றத்தை மதிப்பிட்ட நீதிபதிகள் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.