இந்த 3 ராசிக்கார பெண்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம் - பணமழை நிச்சயம்

சனி மற்றும் சுக்ரன் பகவான் ஆதிக்கத்தால் 3 ராசிக்கார பெண்களுக்கு பண மழை கொட்டப்போகிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 26, 2022, 06:17 PM IST
  • 3 ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் யோகம்
  • சனி - சுக்ரன் ஆதிக்கத்தால் அடிக்கும் அதிர்ஷடம்
  • பணமழையில் 3 ராசிக்காரர்களும் நனையப்போகிறார்கள்
இந்த 3 ராசிக்கார பெண்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம் - பணமழை நிச்சயம் title=

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் யோகம் அடிக்கும். அந்த நேரத்தில் அவர்களுடைய வாழ்க்கை என்பது பண வரவு மற்றும் உடல் நல ரீதியாக செழுமையாக இருப்பார்கள். நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் மாற்றத்துக்கு ஏற்ப அந்த யோகம் கிட்டும். அதேநேரத்தில் ஆண், பெண்களுக்கு ஏற்பவும் யோகங்களும் கூடுதலாக கிடைக்கும். அந்தவகையில் விரைவில் பணயோகம் அடிக்கக்கூடிய 3 பெண் ராசிக்காரர்கள் யார்? என்பதை தெரிந்துகொள்வோம். 

ரிஷபம்

ரிஷபம் ராசி பெண்கள் பணத்தை மிகவும் கவனமாக செலவிடக்கூடியவர்கள். இந்த ராசி பெண்கள் பண விஷயத்தில் மிக மிக கவனமாக இருப்பார்களாம். இதனால்தான் அவர்கள் எப்போதும் பண மேலாண்மை கொண்டவர்கள் சொல்லப்படுகிறார்கள். இதுமட்டுமல்லாமல் பணம் சம்பாதிப்பதிலும் மற்றவர்களை விட சாமார்த்தியஷாலிகள். சுக்ரனின் அவர்களுக்கு வியாபாரத்தில் அதிர்ஷ்டமும் கைகொடுக்கும். 

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு குருவின் உதயம் பிரச்சனைதான்

துலாம்

வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தும் பெண்களாக இருப்பார்கள். மேலும், இந்த ராசிப் பெண்களுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும்.  கடின உழைப்பால் பணத்தை சம்பாதித்துவிடுவார்கள். இதற்கு முக்கிய காரணம் துலாம் ராசியின் அதிபதியாக சுக்கிரன் இருப்பதால், அவர்களின் முயற்சிக்கு கைகொடுக்கிறார்.

மேலும் படிக்க | சுக்கிரன் ராசி மாற்றம்: சூப்பராக ஜொலிக்கப்போகும் ராசிகள் இவைதான், உங்க ராசி என்ன?

மகரம்

சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட மகர ராசிக்காரர்கள், பணம் மற்றும் புகழுக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள். இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் மிகவும் கடின உழைப்பாளிகள். இதன் காரணமாக அவர்கள் தங்கள் தொழிலில் உயர்ந்த நிலையை அடைகிறார்கள். பணம் வசூலிக்கும் விஷயத்தில் கூட மிகவும் கறாராக இருப்பார்கள். இதனால் விரைவில் பணக்காரர்களாகவும் மாறிவிடுவார்கள். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News