Gold Rate Today: தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு, ஒரே நாளில் ரூ.32 குறைந்தது தங்கம்

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ. 4451 ஆக விற்பனையில் உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 32 குறைந்து ரூ. 35,608 ஆக உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 3, 2021, 11:43 AM IST
Gold Rate Today: தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு, ஒரே நாளில் ரூ.32 குறைந்தது தங்கம்  title=

தங்கம் என்பது நம் நாட்டு மக்களுடன் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு விஷயமாகும். ஆபரணமாக அணிந்து அழகு பார்ப்பதற்கும், முதலீடாக வாங்கி வைப்பதற்கும், பங்குச் சந்தையில் வாங்கி விற்று பணம் ஈட்டவும், கவுரவத்தின் அடையாளமாகவும், ஒவ்வொருவர் இதை ஒவ்வொரு விதத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அனைத்து வித விசேஷங்களிலும் தங்கத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ. 4451 ஆக விற்பனையில் உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 32 குறைந்து ரூ. 35,608 ஆக உள்ளது. 

 சென்னையில் இன்று 24 காரட் தூய தங்கத்தின் விலை (Gold Rate), ஒரு கிராம் ரூபாய் 4815.00 ஆகவும் ஒரு சவரன் ரூபாய் 38,520.00 ஆகவும் உள்ளது. சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூ. 67,800-க்கு விற்பனையில் உள்ளது. 

ALSO READ: Gold Rate Today September 2: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதுதான்

தேசிய அளவில் டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, டெல்லியில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 46,340 ஆகவும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 50,570 ஆகவும் உள்ளது.

கொல்கத்தாவில் 22 கேரட் 10 கிராம் தங்கம் 46,690 ரூபாய்க்கும் 24 கேரட் 10 கிராம் தங்கம் 49,390 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.  மும்பையில், 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 46,270 ஆகவும் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 47,270 ஆகவும் விற்பனையில் உள்ளது. 

வெள்ளி விலை (Silver Rate) மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லியில் ஒரு கிலோ ரூ. 63,500 ஆக உள்ளது. 

சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.

உலகளாவிய சந்தைகளில் (International Markets) நேர்மறையான அணுகுமுறை உள்ளதால், தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான நேரமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள். 

பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி (Tax) வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.

ALSO READ: Gold from Water: அற்புதமான கண்டுபிடிப்பு! நீரிலிருந்து தங்கத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News